பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிகாலன் - 253 என்கிறது. அப்பெருந்திருமாவளன் யாவன், அப்பெருவழுதி யாவன் என்பதை உணர்ந்த மூலத்தில் எதுவும் இல்லை. அவர்கள் உயிர் நீத்த இடங்கள் அவர்கள் இன்னார் என்பதை உணர்த்தும் குறியீடாகக் கூறப்பட்டுள்ளமையால் அவர்கள், கரிகாலன் அல்லாத, பிற்காலத்தைச் சேர்ந்த வேறு மனிதராவர். தம்முடைய கூற்றுக்கும் அரண்செய்யும் சான்று எதுவும் காட்டாமலே, அச்சோழன், கரிகாலனாவன் எனக் கொண்டார் திருவாளர் கனகசபை அவர்கள் (1800 ஆண்டுகளுக்கு முந்திய தமிழர்: பக்கம் : 68). சமஸ்கிருதப் புராணக் கதைகளில் வரும் தெய்வதச்சன் மயன் குறிப்பிடப்பட்டிருப்பது, இப்பாட்டிற்குக் கரிகாலன் காலத்திற்குப் பிற்பட்டது என்ற முத்திரையினைப் பொறிக்கிறது. "அந்நாள்" என்ற சொற்றொடர் ஆட்சியும் அத்தகையதே. கரிகாலன் வரலாறு எழுதிய பண்டைய, இன்றைய வரலாற்று ஆசிரியர், மதிப்பளித்து இந்திய அரசர்கள் அனைவரையும் வெற்றிகொண்ட, தன்படையொடு, இமயத்தின் உச்சிக்கே அணி வகுத்துச் சென்ற, தன் அரச சின்னத்தை அம்மலைமீது பொறித்த, மீண்டு வருங்கால், போராட்டத்தின் பின்னரோ, அல்லது வேறு வகையிலோ, வடஇந்தியப் பேரரசர்கள் மூவரிடமிருந்து திறைப் பொருள் பெற்ற பெருமைகளை, இம்மன்னனுக்கு ஏற்றியுள்ளனர். இந்தியாவின் தென் கோடியிலிருந்து, இமாலயத்தின் உச்சி வரையான, ஒரு நெப்போலியப் படையெடுப்பு, இந்திய வரலாற்றின் எந்தக் காலத்திலும், எண்ணிப் பார்க்கவும் இயலா ஒர் அருஞ்செயலாகும். மேலும், பிற்காலக்கட்டுக் கதை ஒன்றின்படி, தம்முடைய பாட்டுக்குப் பதினாறு நூறாயிரம் பொற்காசுகள் பரிசளிக்கப்பட்டவரும் (கலிங்கத்துப்பரணி : பாட்டு : 185) தம் தலைவனின் அருஞ்செயல்களை மிகைப்படுத்திக் கூற முழு உரிமை பெற்றவரும் ஆன, கரிகாலன் புகழ்பாடிய, அவன் சம காலப்புலவராம் உருத்திரங் கண்ணனார், இதைக் குறிப்பிடவில்லை ; ரேனாடுக்கு அப்பால், கரிகாலனின் அத்துணை அருஞ்செயல்களையும், முறைப்படுத்திக் கூறும்