பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- கரிகாலன் 257 கரிகாலன் காலம் : கரிகாலனுக்கும் செங்குட்டுவனுக்கும் இடையில் உறவு கற்பிக்கும் தவறான கொள்கை : கரிகாலன் சிறப்புற வாழ்ந்திருந்தது எந்தக் காலம் என்ற வினா, விடையளிக்கப்படாமல் உளது. இன்றைய வரலாற்று ஆய்வாளர், கி. பி. இரண்டாவது நூற்றாண்டை அவனுக்கு உடையதாக்குகின்றனர். பேராசிரியர் சேஷகிரி சாஸ்திரியார், கடந்த நூற்றாண்டு என்பதின் முற்பகுதியில், தமிழ் இலக்கியம் பற்றிய தம்முடைய ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றில் (கி. பி. 1884), இந்தக் காலத்தைத் தம் கருத்தாகக் கூறியுள்ளார். அவருக்கு முற்பட்ட ஆராய்ச்சியாளர்களைப் போலவே, இவரும், நூலின் மூலம் அளிக்கும் சான்றுகளின் மதிப்பிற்கும், ஆயிரம் ஆண்டுகள் கழித்து எழுதப்பட்ட உரையாசிரியர் களின் பொருள் விளக்கம் அளிக்கும் சான்றுகளின் மதிப் பிற்கும் இடையிலான வேறுபாட்டினை உணராமல், கரிகாலனைச் சிலப்பதிகார மூன்றாம் காண்டத்தின் பாட்டுடைத்தலைவனாகிய சேரவேந்தன் செங்குட்டுவனின் சம காலத்தவனாக மதித்துள்ளார். ஏற்கென்வே குறிப் பிட்டதுபோல, கரிகாலனை, அக்கதை நிகழ்ந்தகாலத்திற்கு முற்பட்ட காலத்தவனாக, நூலின் மூலமே கொண்டுளது. அதற்கு மாறாக, உரையாசிரியர், கரிகாலனை, அக்கதை தொடங்கிய காலத்தில் ஆட்சி புரிந்திருந்தவனாகக் கொண்டுள்ளார், திரு. சேஷகிரி சாஸ்திரியாரின் கொள்கைக்கு மீண்டும் சென்றால், கயவாகு (பாலிமொழியில் கஜபாகு), செங்குட்டுவன் சம காலத்தவன், ஆகவே, கரிகாலனுக்கும் சம காலத்தவன் ஆகிறான். திரு. சேஷகிரி சாஸ்திரியார் சிலப்பதிகாரக் காதை முப்பதாவது வரியில் குறிப்பிடப்பட்டிருக்கும் கயவாகுவையும், இலங்கை வரல்ாற்றுப் பட்டியலில், கி. பி. 113 - 115 காலத்தில் வாழ்ந்தவனாகக் கூறப்பட்டிருக்கும், அப்பட்டியலின் முதலாம் கஜபாகுவையும் ஒருவராகக் கொண்டுள்ளார். (Essay on Tamil literature 1884 Page : 30).