பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிகாலன் 267 அப்பகுதியில், தான் பிறந்த காவிரிப்பூம்பட்டினத்தில், தனக்கு முன் பிறந்து, கணவர் காட்டும் நெறிபிறழாக் கற்பு நெறியால் புகழ் பெற்ற பத்தினிப் பெண்டிர் எழுவரை வரிசைப்படுத்திக் கூறிக், கரிகாலன் மகளும், ஆட்டனத்தியின் மனைவியுமான ஆதிமந்தியை, அவர்களுள் இரண்டாவதாகக் கூறியுள்ளாள், கண்ணகி. ஆகவே, இப்பகுதியில், உண்மையில் கரிகாலன், இறந்த காலத்தவனாகவே காட்டப்பட்டுள்ளான். ஆகக் கூறிய இவற்றால், கரிகாலனைப் பெயர் சுட்டியோ, மறைமுக வகையிலோ குறிப்பிடும் சிலப்பதிகாரப் பகுதிகள் அனைத்தும் அவன் காலம் (எத்தனை ஆண்டு என்பதை நம்மால் சொல்ல இயலாது). அக்கதை நிகழ்ச்சிகள் தொடங்கிய காலத்திற்கு முற்பட்டது. ஆகவே, கரிகாலன் காலத்தைச் செங்குட்டுவன் காலத்தைக் கொண்டு கணிப்பது இயலாது என்பதையே உறுதி செய்கின்றன. o செங்குட்டுவன் காலமும், சம காலத்தவன் கஜபாகு என்பதிலிருந்து உறுதி செய்வது இயலாது. திருவாளர் ஹல்ட்ஸ் அவர்களின், "அகச் சான்றுகளால் துணை செய்யப்படும்வரை, பெயர் ஒற்றுமை பொருளற்றது” என்ற தடைக்கு இன்னமும் விடையளிக்கப்படவில்லை. மேலும், காலத்தால் அவனுக்கு நெருங்கியதான மகாவம்சத்தில் கஜபாகு, உணர்ச்சிமிக்க பெளத்தனாகவே படைத்துக் காட்டப்பட்டுள்ளான். புத்த மடங்களைக் கட்டும் அவன் செயல்கள் விளக்கிக் கூறப்பெறும் அந்நூலில், இந்தியாவி லிருந்து, பத்தினி வழிபாடு, வந்து இடம் பெற்றதற்கான குறிப்பு எதுவுமே இல்லை என்பது மட்டுமன்று, கஜபாகு வாழ்க்கை நிகழ்ச்சிகளின் பெரும்போக்கு வேறு சமயம் எதையும் பொருட்படுத்தா அளவு, அவன் ஒரு வெறிபிடித்த பெளத்தன் என்ற முடிவிற்கே எவரையும் கொண்டு செல்லும். பத்தினித் தேவியின் காலணிகலன்களைக் கஜபாகு தஞ்சாவூரிலிருந்து எடுத்துச் சென்றான் என்பது கூறப்பட்டு, அதனால், பத்தினி, ஒரு பெண் தெய்வமாக, அவன் காலத்திற்கு முன்பே வழிபடப்பட்டாள் என்பது குறிப்பாக உணர்த்தப்படுவதால், கஜபாகுவின், சோழநாட்டு வெற்றியைக் குறிப்பிடும் இலங்கையின் பிற்காலக் கட்டுக்கதைகள்,