பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 தமிழர் வரலாறு பத்தினிவழிபாடு, அவன் காலத்திற்கு முற்பட்டது எனக் கொண்டுள்ளன. சிலப்பதிகாரத்தில், மாளுவ நாட்டு மன்னன் போலும் மற்றவர்களும், கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும், கண்கள் கண்டுகொண்டிருக்க வானுலகம் புக்குத் தெய்வமாகிவிட்ட கண்ணகிக்குச் செங்குட்டுவன் எடுத்த விழாவிற்கு வந்தான் எனக் கூறப்பட்டுளது. அடிக்குறிப்பு : "மாளுவ வேந்தரும், கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும் எந்நாட் டாங்கண் இமைய வரம்பனின் நன்னாள் செய்த நாளணி வேள்வியில்" - - சிலம்பு : காதை : 30 வரி :159 - 162. அக்காப்பியத்தின் உரையப்பாயிரமாம், உரைபெறு கட்டுரை, மேற்படி கூற்றொடு ஒருபகுதி மாறுபட்டுக் கண்ணகியின் வியத்தகு கதையைக் கயவாகு கேட்டு, பற்பல முறை விழா எடுத்தான் எனக் கூறுகிறது. அடிக்குறிப்பு : ("அது கேட்டுக் கடல் சூழ் இலங்கைக் கயவாகு வென்பான், நங்கைக்கு நாட்பலி பீடிகைக் கோட்டம் முந்துறுத்து, ஆங்கு அரந்தை கெடுத்து வரந்தரும் இவள் என, ஆடித்திங்கள் அகவையின் ஆங்கோர் பாடி விழாக்கோள் பன்முறை எடுப்ப"). இவ்வுரைப்பாயிரம், பெருங்கிள்ளி என்ற சோழன், பத்தினித் தெய்வத்திற்கு, உறையூரில் கோயில் கட்டினான் என்றும் கூறுகிறது. "அது கேட்டுச் சோழன் பெருங்கிள்ளி, கோழியகத்து, எத்திறத்தானும் வரந்தரும் இவளோர் பத்தினிக் கடவுள் ஆகுமென நங்கைக்குப்பத்தினிக் கோட்டமும் சமைத்து நித்தல் விழா நிகழ்வித்தோனே" - ஆனால், சிலப்பதிகாரக் காப்பிய முதல் நூலில், இது குறிப்பிடப்படவில்லை. ஏற்கெனவே குறிப்பிட்டது போல, இலங்கை வரலாற்றுக் காலவரிசைப் பட்டியல், கஜபாகுவுக்கு