பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 தமிழர் வரலாறு குறைந்த புகழே கொண்ட சிற்றரசர்களையும் குறிப்பிடு கின்றனர். என்றாலும், கரிகாலனைக் குறிப்பிடவில்லை. அதற்கு மாறாகத் தாலமி அவர்களின் தமிழ்நாட்டுக்கு கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் நில இயல் ஏடு, அந்நாட்டின் படத்தைத் தமிழ் இலக்கியங்கள், கரிகாலனைப் பாராட்டி யிருப்பதுபோல், தமிழ்நாடு முழுவதும், ஒரு பேரரசின் ஒரு குடைக் கீழ்க் கொண்டுவரப்பட்டு இருந்தது போல் அல்லாமல், பற்பல சிற்றரசர்களால் ஆளப்பட்டிருந்த நாடாகவே காட்டுகிறது. மேலும், பட்டினப்பாலையில் குறிப்பிட்டிருக்கும், தங்கள் தங்கள் கூடாரங்கள் மீது வாதிட்டழைக்கும் கொடிகளை ஏற்றி வைத்துக்கொண்டு வாதிடுவார் செயல், வாதமுறை நன்கு வளர்ந்தவிட்ட ஒரு காலத்தையே, நிச்சயமாகக் சார்ந்ததாகும். இது, கி.பி. மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்னர், வடஇந்தியாவிலும், நிச்சயமாக இடம் பெறவில்லை. கரிகாலனுடைய உண்மையான காலம் : கல்வெட்டுச் சான்றுகள், கரிகாலன் சிறப்புற்றிருந்த காலமாகக் கி.பி. நான்காம் நூற்றாண்டைக் குறிப்பிடுகின்றன. அவன், காஞ்சியைப் பல்லவர்களிடமிருந்து கைப்பற்றி, அதைப் பொன்வேய்ந்தான். காஞ்சிப் பல்லவர் ஆட்சி, கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலும், அதற்கு முற்பட்ட காலத்திலும், மிகப் பெரும் வலிவோடு இருந்தது. சமுத்திரகுப்தனின் பிராஸஸ்தி குறிப்பிடும் விஷ்ணு கோபன், (ஒரு பல்லவப் பெயர் : தமிழ்ப் பெயர் அன்று) காஞ்சிக் காவலனாக இருந்த கி.பி. 350 வரை, அப்பேராற்றல் தொடர்ந்து இருந்து வந்தது. இக்கால கட்டத்தில், பாணாவாசிக் கதம்ப அரச இனத்தைத் தோற்றுவித்த மயூரசர்மன், அரசுக்கு எதிராக எழுப்பிய கலகத்தால், அது பலவீனப்பட்டது. ஆகவே, கரிகாலன், திரிநயன பல்லவனை வென்று, காஞ்சியை அடுத்த தெலுங்கு, மாநிலத்தில், தனக்குத் திறை செலுத்தும் சிற்றரசனாக, ஒரு சிறிய நாட்டைக் காணத் துரத்தியது, நான்காம் நூற்றாண்டின் இறுதியில் நிகழ்ந்திருக்கக் கூடியதே தெலுங்குக் கல்வெட்டுகளும், தெலுங்கு இலக்கியங்களும் திரிநயனப்