பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிகாலன் - 27] பல்லவன் குறித்துக் குறிப்பிடும் பல்வேறு குறிப்பீடுகளுக்கு, இது ஒன்றே பொருந்தும் விளக்கமாகும். பிறிதொரு ஒருமைப்பாடும் இதை உறுதி செய்கிறது. கீழைச் சாளுக்கியக் கல்வெட்டுகளில், அச்சாளுக்கிய குலத்தை ஆதிகாலத்தில் தோற்றுவித்தவன், தrவிண பரதத்தின் அரசனான திரிலோசனன் என்பவனால், அல்லது திரிலோசன பல்லவ னால், ஒரு போரில் தோற்கடிக்கப்பட்டவனும், அயோத்தியா விலிருந்து போர் மேற்கொண்டு வந்தவனுமாகிய, ஒரு விஜயாதித்தியன் ஆவன் எனக்கூறும் ஒரு பழங்கதையினைக் கொண்டுளது. இந்த விஜயாதித்தியன், கி.பி. ஏழாம் நூற்றாண்டில், பாதாமி அரசனான, இரண்டாம் புலிகேசிக்கு ஐந்து தலைமுறை முன்னே தள்ளப்படுகிறான். இவ் வகையால், கரிகாலன் திரிலோசனன், விஜயாதித்தியன் ஆகிய மூவரும், பெரும்பாலும் ஒரு காலத்தவராகின்றனர். ஆகவே, கரிகாலன் சிறப்புற்றிருந்த காலம், பெரும்பாலும், நான்காம் நூற்றாண்டின் இறுதியும், ஐந்தாம் நூற்றாண்டின் தொடக்கமுமாம்; அவன் ஆட்சியின் உச்ச காலம், கி.பி. 400. அடிக்குறிப்பு : - கரிகாலன் காலம் பற்றி நூலாசிரியர் கொள்ளும் முடிவு பற்றி, மொழிபெயர்ப்பாசிரியர் கருத்து, இவ்வதிகாரத்தின் ஓர் இணைப்பில் விளக்கப்பட்டுள்ளது. கரிகாலன் : திரிலோசனப் பல்லவன் காலத்தவனா? (இக்குறிப்பு. ஆந்திரப் பல்கலைக் கழக ஆட்சிமன்ற உறுப்பினர், திரு. குண்டுர். கே. ஆர். சுப்பரமணிய அய்யர் அவர்களால் தரப்பட்டது) - திரிலோசனப் பல்லவன் என்ற பெயருடைய அரசன் ஒருவன், தெலுங்கு நாட்டில், பண்டை நாட்களில் இருந்தான் எனக்கூறும், வலுவான, நிலையான பழங்க்தைகள் உள்ளன. அவன், திரிநயனப் பல்லவன், முக்கண்டி பல்லவன், முக்கண்டிக் காடுவெட்டி என்றும், ஒரே பொருளுடைய சொற்களால் அழைக்கப்பட்டான். (M.E.R. 1908 Page , 82,