பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிகாலன் - 275 மேற்கூறிய குறிப்புகளிலிருந்து, திரிலோசனன், இரண்டாம் புலிகேசிக்கு முன்னர் வாழ்ந்தான் என்பது உறுதியாகிறது என்றாலும், ருத்ரனுக்கும், சூரியனுக்கும், இடையிலான தலைமுறைகளின் எண்ணிக்கை கொடுக்கப்படவில்லை யாதலின், திரிலோசனின் சரியான காலத்தைக் கண்டறிவதில், நாம் இன்னமும் இருட்டிலேயே உள்ளோம். வெலநாடு ஆண்ட பிரித்வேஸ்வரனின், பித்தாபுரம் கல்வெட்டுகளில் (5.1.108) (Ep.ind. P.34,48) பிரித்வேஸ்வனிலிருந்து பதினெட்டு அரசர்கள், அல்லது பதினமூன்று தலைமுறைகளுக்கு முன்னே வைக்கப்படும், அவ்வரச குலத்தைத் தோற்றுவித்த முதலாம் மல்லன், திரிநேத்திரனோடு நட்பு கொண்டிருந்தாகக் கூறப்பட்டுளது. ஆனால், இதுவும் நமக்கு மேற்கொண்டு உதவவில்லை. தெலுங்குச் சோடக்கல்வெட்டுக்களில், திரிலோசன பல்லவன், கரிகாலச் சோழனின் சம காலத்தவனாகக் காட்டப்பட்டுள்ளான் (4469 of 1919 S. 1153 M.E. R. 1920 P. 111 - 117). அவர்களின் கணக்கிலாக் கல்வெட்டுக்கள் அனைத்தும், தங்களின் புகழ்வாய்ந்த குலமுன்னோனைக் குறிப்பிடுகின்றன. அவற்றுள் சில, உண்மையில், பிற்கால சோழர்களின் தென்னாட்டுக் குடிவழிப் பட்டியல்கள், குண்டுர் மாவட்டத்தில் கல்வெட்டுகளை வெட்டியவனாகத் தெரியவரும் விஷ்ணுவாகு பிறந்த ஒரு பிரிவினராகிய, அயோத்தியாவைச் சேர்ந்த சூரிய குலத்தவனாகத் தங்கள் குல முதல்வனைக் கொள்வது போலவே, அவனுக்கு வட இந்தியப் பிறப்புரிமையை அளிக்கின்றன. அவை, அவனைப் பல்லவத் தலைநகர் காஞ்சியோடு தொடர்பு படுத்துவதும் செய்கின்றன. அப்பட்டியல்களில் நீண்ட இடைவெளி நிரப்பப்படாமல் விடப்பட்டிருப்பதால், இக்கல்வெட்டுகளிலிருந்து, தொடர்பு படுத்தும் குடிவழிப்பட்டியில் ஒன்றை உரு வாக்குவது இயலாது. அக்கல்வெட்டுகள் சிலவற்றில், இடம் பெற்றிருக்கும் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி, திரிலோசனனோடு, கரிகாலன் கொண்ட தொடர்பு ஆகும். ஒரே காலத்தைச் சேர்ந்த தெலுங்கு, தமிழ் இலக்கியங்களில், இது, முறையாக, வரலாற்று நிகழ்ச்சியாக ஆக்கப்பட்டுளது. மெக்கனிஸ்