பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 தமிழர் வரலாறு "அரசிளங் குமாரரும் உரிமைச் சுற்றமும், பாரத குமரரும், பல்வேறு ஆயமும், ஆடுகள மகளிரும், பாடுகள மகளிரும், தோருகொள் மருங்கின் சூழ்தரல் எழினியும், விண்பொரு பெரும்புகழ் கரிகால் வளவன் தண்பதம் கொள்ளும் தலைநாட் போல கோவலன் தன்னொடும் கொள்கையின் இருந்தனள் மாமலர் நெடுங்கண் மாதவி தானென்” - கடலாடுகாதை 155 - 174 இதில் கரிகாலைைனப் பற்றிவரும் குறிப்பு, அரசிளங் குமாரர், அவர்தம் உரிமை மகளிர், வணிகர் குலச் செல்வங்கள், அவர்தம் ஏவல் மகளிர், ஆடவும், பாடவும் வல்ல மகளிர் ஆகிய பெருங்கூட்டம் உடன் வரச்சென்று, கடற்கரைக் கண்ணே, திரைச் சீலைகளை நாலவிட்டு, ஆரவாரப் பேரொலி எழக் கரிகாலன் புனலாட்டு விழா மேற்கொள்ளும் நிகழ்ச்சி, கோவலன் அத்திரி tது அமர்ந்ததும் மாதவி வையம் ஏறியும் கடலாடச் சென்ற நிகழ்ச்சிக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளதேயன்றிச், சிலப்பதிகார நிகழ்ச்சி நடைபெற்ற நிகழ்ச்சியாகவோ, அச்சிலப்பதிகார நிகழ்ச்சியோடு தொடர்புடைய நிகழ்ச்சியாக வோ, காணப்படவில்லை. மாறாக, இதில் கூறப்பட்டிருக்கும், கரிகாலன் கடலாடல் திகழ்ச்சி என்பதை உறுதிசெய்யும், வலுவான அகச்சான்று ஒன்றும் சிலப்பதிகாரத்திலேயே இடம் பெற்றுளது. * - "மன்னன் கரிகால் வளவன் மகள், வஞ்சிக்கோன் தன்னைப் புனல் கொள்ளத் தான் புனலின் பின்சென்று கன்னவில் தோளாயோ, என்னக், கடல்வந்து முன்னிறுத்திக் காட்ட அவனைத் தழிஇக்கொண்டு பொன்னங் கொடிபோலப் போதந்தாள்", - வஞ்சினமாலை :1-15.