பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 - --- - - - - - தமிழர் வரலாறு அப்பாலும் நிற்குமாக" என்பதே பொருளாக, அந்நிகழ்ச்சி, கண்ணகி மணவிழா நிகழ்ச்சிக்கு முற்பட்ட காலத்தே நிகழ்ந்த - ஒன்று என்பது உறுதியாவது காண்க. இமயத்தே பொறித்த என்னும் பொருள்தரும். "இமயத்து இருத்திய" என்ற தொடரில் வரும், "இருத்திய” என்ற பெயரெச்சம் இறந்த காலப் பெயரெச்சமாய் அமைந்திருப்பதும், அந்நிகழ்ச்சி கடந்தகால நிகழ்ச்சி என்பதையே உறுதி செய்கிறது. ஆகவே, அது செய்தவனாக, இளங்கோவடிகளார் கூறும் "செம்பியன்", புகார் நகரைக் கடந்த காலத்தே காவல் புரிந்த வனேயல்லது, கண்ணகி திருமணம் நிகழ்ந்த காலத்துக் காவலன் அல்லன் என்பது தெளிவாம். - மேலே கூறிய விளக்கங்களால், சிலப்பதிகார நூலாசிரி யராகிய இளங்கோவடிகளார்,கரிகால் வளவனை அறிந்தவர் அவனுக்குக் கரிகாலன் என்பதோடு, திருமாவளவன் என்ற பெயர் உண்மையையும் அறிந்தவர்; தென்னகத்தில் தன்னால் வெற்றி கொள்ளத்தக்க வேந்தர் யாரும் இல்லாமையால், போர் விரும்பி வடநாடு சென்ற காலை, இமயப் பெருமலை அவன் முயற்சிக்குத் தடையாக நிற்பது பொறாது, அதன்மீது, தன் புலிக்கொடி பொறித்து மீள்கையில், வச்சிர நாட்டுக் கோன் கொடுத்த பட்டிமண்டபம் , அவந்திவேந்தன் அளித்த தோரணவாயில், ஆகியவற்றைப் பெற்றுக் கொணர்ந்து, புகார் நகரத்தில் அமைத்து, நகரை அழகு படுத்திய அருஞ்செயல் களை அறிந்தவர் (இந்திரவிழவூர் காதை : 89 -104) என்பதும், அதேபோல், அரசிளங்குமரர், வணிகர்குலச் சிறார், ஆடல் பாடல் வல்ல இளமகளிர் சூழ்ந்துவரச் சென்று கடலாடி மகிழ்வதில் ஆர்வமுடையவன் கரிகாலன் என்பதையும் (கடலாடுகாதை 155 - 160) அத்தகைய புனலாடல் விழா ஒன்றில், புதுப்புனலால் அடித்துச் செல்லப்பட்ட அவன் மருகன் ஆட்டனத்தியை, அவன் மகள் ஆதிமந்தி மீட்ட அருஞ்செயலையும் (வஞ்சினமாலை : 9-130) அறிந்தவர் என்பதும் தெளிவாக உறுதி செய்யப்பட்டன. . கரிகாலனின் இவ்வரலாறுகளை அறிந்திருந்தமையால் தான், இளங்கோவடிகளாரால், அவற்றை எடுத்துக் கூறிப்