பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிகாலன் 289 நிகழ்ந்தன கூறும் மதுரைக் காண்டத்து இறுதியில் வரும் கட்டுரையின் தொடக்கத்திலும், சேரநாட்டில் நிகழ்ந்தன கூறும் வஞ்சிக் காண்டத்து இறுதியில் வரும் கட்டுரையின் தொடக்கத்திலும், முறையே. "முடியுடை வேந்தர் மூவ ருள்ளும் தொடிவிளங்கு தடக்கைச் சோழர் குலம்". "முடியுடை வேந்தர் மூவருள்ளும்" படைவிளங்கு தடக்கைப் பாண்டியர் குலம்". "முடியுடை வேந்தர் மூவருள்ளும் குடதிசை ஆளும் கொற்றம் குன்றா வார மார்பிற் சேரர் குலம்" என, அந்நாடுகளை ஆண்ட அரச குலத்தவர் பொதுவாகக் கூறப்பட்டிருந்தாலும், வஞ்சிக் காண்டத்துக் கட்டுரை இறுதியில், "செங்குட்டுவனோடு ஒரு பரிசா நோக்கிக் கிடந்த வஞ்சிக்காண்டம்", என்றும், மதுரைக் காண்டத்துக் கட்டுரை. இறுதியில், "நெடுஞ்செழியனோடு ஒரு பரிசா நோக்கிக் கிடந்த மதுரைக் காண்டம்" எனச் சிலப்பதிகாரத்து நிகழ்ச்சிக் காலத்துக் காவலர்கள் பெயர்கள் கூறப்பட்டிருப்பது போல், புகார்க் காண்டத்துக் கட்டுரை இறுதியில், கரிகாலன் பெயர் கூறப்படாமையும் காண்க. r