பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிகாலன் 295 ஆகவே, செங்குட்டுவன் வஞ்சியில் கோயில் எடுத்து விழாக்காண்பதற்கு முன்னர்ே, தமிழ் நாட்டவர், கண்ணகிக்கு விழா எடுத்து விட்டனர் என்பது தெளிவாகிறது. . தமிழகத்துப் பேரூர்களில், பத்தினிப் பெண்டிர்க்குக் கோயில் கட்டி வழிபடும் வழக்கம் பண்டே இருந்தது என்பதை, மணிமேகலையில் வரும் பின்வரும் வரிகளே உணர்த்துகின்றன. - - . "ஒருங்குடன் மாய்ந்த பெண்டிர்க்காயினும், இறந்தோர் மருங்கில் சிறந்தோர் செய்த சுடுமண் ஓங்கிய நெடுநிலைக் கோட்டம்". - - மணி : : 55 - 59. இவ்வகையால், சோணாட்டுத் தஞ்சையில் இருந்த பத்தினிக் கோட்டம் ஒன்றிலிருந்து, அத்தெய்வத்துக் காலனியாம் சிலம்பினைக் கயவாகு, கொணர்ந்திருத்தல் கூடும். மேலும், கயவாகு, சோணாட்டின் மீது படையெடுத்துச் சென்று வென்று திரும்பிய அச்செய்தியைக் கூறும் அதே இலங்கை வரலாற்று நூல், அப்படையெடுப்பிற்குக் காரணமாம் முன் நிகழ்ச்சி ஒன்றையும் கூறியுள்ளது. r கரிகாலன், இலங்கை மீது படையெடுத்தச் சென்று, ஆங்குப் போரில் தோற்ற பல ஆயிரம் வீரர்களைக் கைப்பற்றிக் கொணர்ந்து அவர்களைக் கொண்டு காவிரிக்குக் கரை அமைத்தான் எனவும், இலங்கை அரசன் கயவாகு, நள்ளிருள் யாமத்து நகர் சோதனை செய்துவருகின்றபோது, நரைத்த முதுமகள் ஒருத்தி, பெருங்குரற் பாய்ச்சி அழக்கண்டு, அன்னவள் இன்னலுக்கு எது, பன்னெடுநாளைக்கு முன்னர்ப் படையெடுத்துப் போந்த கரிகால் வளவன் சிங்களக் குடிகள் பலவற்றைச் சிறைப்படுத்திச் சென்றானென்று, தன் குடிக்கு ஒரு மகளையும், கொண்டு போயினமையே எனக் கேட்டுச் சோணாட்டின் மீது படையெடுத்து வந்து, தன் நகர்க் குடிகளைச் சிறையினின்றும் விடுவித்தனன் என்றும் G. p15pg (Wpham's Mahavamsum Vol. 1 Page : 228).