பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 தமிழர் வரலாறு செங்குட்டுவன் வழிபட்ட கண்ணகி, போற்றிய கற்புடை மகளிர் எழுவரில், கரிகாலன் மகளும் ஒருத்தி. ஆகவே, செங்குட்டுவனுக்குக் காலத்தால் முற்பட்டவன் கரிகாலன், செங்குட்டுவன் - காலத்தவன் கயவாகு, ஆகவே, கரிகாலன் இலங்கைப் படையெடுப்பு, கயவாகு காலத்திற்கு முற்பட்ட தாதல் வேண்டும். அப்படையெடுப்பால் இலங்கை நாட்டவர்க்கு ஏற்பட்ட இழுக்கைத் துடைக்கவே, சோணாட்டின் மீது கயவாகு படையெடுத்தான். அப் படையெடுப்பு, செங் குட்டுவன் காலத்திற்குப் பின்னரே நிகழ்ந்திருக்க வேண்டும். செங்குட்டுவன் காலத்தில், சோணாட்டு அரியணையில் இருந்தவன் அவன் மைத்துன னாகிய கிள்ளி வளவன். அவன் அரசுரிமையைப் பொறாது, அவனோடு மாறுபாடுகொண்ட சோழர் குலத்து இளவரசர் ஒன்பதின்மரைச் செங்குட்டுவன் வென்று அடக்கினான் என்கிறது. சிலம்பு. "மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா ஒத்த பண்பினர் ஒன்பது மன்னர் இளவரசு பொறாஅர் ஏவல் கேளார் வளநாடழிக்கும் மாண்பினராதலின் ஒன்பது குடையும் ஒருபகல் ஒழித்து, அவன் பொன்புனை திகிரி ஒரு வழிப் படுத்தோய்!" - - சிலம்பு : 27 : 18 - 123. செங்குட்டுவன் நண்பனாகிய கயவாகு அச்செங்குட்டுவன் காலத்திலேயே அவன் மைத்துனன் மீதே படையெடுத்துச் சென்றிருக்கமாட்டான். சோணாட்டில், செங்குட்டுவன் காலத்திலேயே எழுந்து, அவனால் அடக்கி வைக்கப்பட்ட ஆட்சி உரிமைப்போர், அவன் காலத்திற்குப் பின்னர் உரம் பெற்றிருக்கும் ஆதலின், அக்காலமே, அந்நாட்டின்மீது படையெடுப்பதற்கு வாய்ப்புடைய காலமாம் ஆதலின், கயவாகுவின் சோணாட்டுப் படையெடுப்பு, செங்குட்டுவன் காலத்திற்குப் பின்னரே நிகழ்ந்திருக்க வேண்டும். அக்காலை, வஞ்சியில், செங்குட்டுவனால் தொடங்கப்பட்ட கண்ணகி