பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொடக்க காலத்தில் வெளிநாட்டு வாணிகம் 23 சேர்ந்தவர்தாம் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை', 'திருவாளர் பெரோசுஸ் அவர்களால் எடுத்துக்காட்டப் பெற்ற, மனித மீனாகிய "கேனெஸ்” பற்றிய பழங்கதை, கடலுக்கு அப்பாற்பட்ட, நாகரிகம் மிக்க ஒரு நாட்டோடு கடல்வழித் தொடர்பு இருந்தது பற்றி வாதிடுகிறது. கேனெஸ், நாகரிகக் கலையைத் தன் உடன் கொண்டு, பர்வியன் வளைகுடாவை நீந்திக் கடந்து, நனி மிகப் பழைய சுமேரிய நகரங்களை (எரிடு நகரும், பிற நகரும்) அடைந்தான் என்று கூறியுள்ளார். இந்தியாவாம், அவர்கள் தாயகத்தில் தான், (அது, சிந்துநதிப் பள்ளத்தாக்காதல் கூடும்), அவர்கள் நாகரிகம் வளர்ச்சி பெற்றதாக நாம் கூறுகிறோம். அவர்களின் எழுத்துக்கலை அங்குதான் முதன்முதலில் கண்டுபிடிக்கப் பட்டு, முழுக்க முழுக்க, படிவவடிவாம் நிலையிலிருந்து எளிமையும், சுருங்கிய வடிவும், உடையதாக வளர்ந்திருக்கக் கூடும். அது, பாபிலோனியாவில், பிற்காலத்தில் மென்மையான களிமண்மீது, நாற்சதுர வடிவிலான முனையினையுடைய எழுத்தாணிகொண்டு எழுதப்பட்டதால், தனிச்சிறப்பு வாய்ந்த ஆப்பு வடிவின் தோற்றத்தைக் கொண்டுவிட்டது. வழியில் தங்கள் நாகரிகத்தை "எலம்" (Elam) எனும் இடத்திலும் விட்டுச் சென்றனர். இதுவே, சுமேரிய நாகரிகத் தோற்றத்தின் நம்பத்தக்க தத்துவமாகத் தெரிகிறது. இன்றைய எழுத்தாளர்களால், உறுதிப்படுத்த, போதிய நேரான அகச்சான்று இல்லாத, ஆனால் நிகழக்கூடியதாகத் தெரியும் ஒரு தத்துவமாகவே அளிக்கப்படுகிறது என்பது தெளிவாகப் புரிகிறது" என்று கூறுகிறார். மொகஞ்சோ-தரோ : “. . . திருவாளர் ஆல்ஸ் அவர்களின் நூல் வெளிவந்த பன்னிரண்டு ஆண்டுகளுக்குள், அரப்பா, மொகஞ்சோதரோ அகழாய்வின் பயனாக அவர் தத்துவத்தை அரண் செய்வதற்கான நேரிடை அகச்சான்று" - (Direct Evidence to back) தரப்பட்டு, அவர் கருத்துப்படி எது "நடக்கக் கூடியதாகக்" கருதப்பட்டதோ, அது "நடந்ததாகவே" ஆகிவிட்டது. அவர் கூறிவந்த கையெழுத்துப் படிவங்களுக்