பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளந்திரையன் 307 விளக்கத்தில், பண்டைத் தமிழ்ப் புலவர்களுக்குத் தெரியாத, அளவுக்கு மீறிய உயர்வு நவிற்சி அணிக்கு இயல்புடைய தாகிவிட்ட சமஸ்கிருத இலக்கியச் செல்வாக்கின் அடிச்சுவடுகளைக் காணலாம். பாட்டின் ஆசிரியர், ருத்திரன் மகன் கண்ணனார், (உருத்திரங்கண்ணனார்) ஒரு பார்ப்பனர் ஆதலும், பாடற்பொருள், முன்னரே குறிப்பிட்டவாறு, இந்நூலாசிரியர் காலத்துக்கு ஏறத்தாழ ஆயிரம் ஆண்டு களுக்கு முன்பே, ஆரியமயமாக்கப்பட்டுவிட்ட காஞ்சியாம் ஆதலுமே காரணங்களாம். ஆகவே, ஆரியக் கொள்கைகள் இடம் பெற்றிருப்பதில், இப்பாட்டிற்கும், பழைய தொகைப் பாக்களுக்கும் இடையில் உள்ள மிகப்பெரிய வேறு பாட்டினை உணர்த்துவதற்காக, இப்பாட்டிலிருந்து, ஆரியச்சார்பான, மேலும் சில, குறிப்பீடுகளைக் காட்டு கின்றேன். "இளந்திரையனின் குலமுதல்வனாகவும், பரந்த இப்பேருலகை அளந்து கொண்டவனாகவும், மார்பில் அழகிய மறுவுடையனாகவும், கடல்நிற மேனியுடைய வனாகவும், விஷ்ணு கூறப்பட்டுள்ளார். "இருநிலம் கடந்த, திருமறு மார்பின், முந்நீர் வண்ணன்". - பெரும்பாண் : 29 - 30, பிராமணர்கள் வேதம் ஓதுவது, வேள்வித்துரண் ஆகியவற்றை விளக்கும் பாட்டின் பகுதிகள், முன்னரே எடுத்துக் காட்டப்பட்டன. இளந்திரையனின் பேராற்றல் பாண்டவர் ஆற்றலோடு ஒப்பு கூறப்பட்டுளது. இளந்திரையன் அரண்மனை முற்றத்தில், திறைப் பொருள்களோடு காத்துக் கிடக்கும் அரசர்கள், தேவர்கள் வாழும் இமயமலையில், வெள்ளிய அலைகளைக் கொண்ட நீரைக் கிழித்துக் கொண்டு ஒடுதலால், ஒளிவீசும் உச்சியிலிருந்து, பொன்னைக் கொழித்துக் கொண்டு குதித்தோடிவரும், கடத்தற்கரிய கங்கையாற்றில், அப்பெரு வெள்ளத்தைக் கடந்து, மறு கரைக்குச் செல்ல, அவ்வாற்றில் விடப்படும் ஒரே தோணியை எதிர்நோக்கிக் காத்துக் கிடக்கும் மக்களோடு ஒப்பு கூறப்பட்டுள்ளனர்.