பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளந்திரையன் 319 முறிதிமிர்ந்து உதிர்த்த கையள் அறிவு அஞர் உறுவி ஆய்மட நிலையே" - நற்றிணை 106. இம்மூன்று பாடல்களில், முன்னவை இரண்டும், இளந் திரையன் பாடியனவாகவும், இறுதிப்பாட்டு, தொண்டை மான் இளந்திரையன் பாடியதாகவும் கூறப் பட்டுள்ளன: இருவரும் பெரும்பாலும் ஒருவரே தானே உணர்ந்து உணர்ந்து பெற்ற உணர்வால் உந்தப்படாமல், பண்டே இருந்துவந்த கவிமரபுத் தொடர்களே, திரும்பத் திரும்ப எடுத்துக் கூறப்பட்டுள்ளன என்பதை வெளிப் படுத்தும் வகையில், இப்பாடல்களில், இயற்கைக்கு மாறான வலிந்து மேற்கொண்ட செயல்பாட்டு நிலையும், சமஸ்கிருதப் பாக்களின் சூழ்நிலைச் சாயலும் கலந்து காற்று வீசுவதாகவே நான் கருதுகின்றேன். இளந்திரையன் பாடல்களும், பெரும் பாணாற்றுப் படைப் பாடலும் சமஸ்கிருத ஆசிரியர்களால் மலிந்த திராவிட நாட்டுக் காஞ்சீபுர மாவட்டத்தில் பாடப்பெற்ற முதல் தமிழ்ப் பாக்களாகும். ஒன்று, அவனால் இயற்றப்பட்ட அல்லது அவனுக்குப் பெருமைசேர்க்க, அவன் பெயரில், யாரோ ஒருவரால் இயற்றப்பட்ட இளந்திரையம் என்ற நூல், பிற்கால உரைகளில் குறிப்பிடப்பட்டுளது. இது இப்போது வழக்கிறந்து போனதாகத் தெரிகிறது. இளந்திரையனுக்குப் பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர்ப் பிராகிருத மொழியை ஆட்சி மொழியாகக் கொண்ட ஆரியராஜாக்கள் அல்லது ஆரியமயமாக்கப்பட்ட ராஜாக்கள், காஞ்சி நாட்டை ஆண்டு வந்தனர். வழிவழியாக வந்த சேர, சோழ, பாண்டிய அரசவைகளோடும், தமிழ் நாட்டுக் குறுநிலத் தலைவர்களின் அரசவைகளோடும் மட்டுமே தொடர்பு கொண்டிருந்த தமிழ்ப் புலவர்களை, அக்காஞ்சி நாட்டுக் காவலர்கள் பேணிப் புரக்கவில்லை. கரிகாலனின் காஞ்சிவெற்றி, அவ்விடத்தைத் தமிழ் இலக்கிய வளைவுக்குள் முதன்முதலில் கொண்டுவந்து சேர்த்தது. இன்றும் அழியாமல் வழக்கில் இருக்கும் பழந்தமிழ் இலக்கியங்களில், பல்லவர் பற்றிய குறிப்பு அறவே இல்லாமல்