பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. கரிகாலனுக்குப் பிற்பட்ட சோழ அரசர்கள் தொகை நூல்களிலிருந்து பெறலாகும், சிறு அளவிலான வரலாற்றுச் செய்திகள் : பழைய தொகை நூல்களைச் சேர்ந்த ஆயிரத்து ஆறுநூறு பாடல்களும் அரசர்கள், குறுநிலத்தலைவர்களின் செயல் பாடுகள் பற்றிய ஒருசில குறிப்பீடுகளையே இங்கொன்றும், அங்கொன்றுமாகக் கொண்டுள்ளன. அக்குறிப்பீடுகள் தாமும், அப்பாக்கள் பாடப்பெற்றபோது வாழ்ந்த தமிழரசர்களின் தொடர்ச்சியான வரலாற்றினை வகுக்கவோ, அவற்றில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரு சிலரின் வாழ்க்கை வரலாற்றினைக்கூட வகுக்கவோ இயலாத அளவு, அருகியுமே இடம் பெற்றுள்ளன. கரிகாலன் வாழ்க்கை பற்றிக் கூறியது போலவே, அரசர்கள் மேற்கொண்ட போர்க்களப் பெயர்கள். போரிடப்பட்ட இடங்கள், தோற்ற அரசர்களின் பெயர்கள் ஆகிய இவற்றை மட்டுமே, அம்மூலங்களிலிருந்து பெறலாம். பெரும்பாலான இடங்களில், அப்பாக்கள், அரசர்களின், குறிப்பிட்ட வீரச்செயல்களின் புகழ் உரைகளாக அமையாமல், தெளிவிலாப் பொதுநிலப் புகழ் உரைகளாகவே உள்ளன. அவற்றின் உண்மையான ஒரு சிறப்பு, சிலப் பதிகாரம் மற்றும் பிற்கால இலக்கியங்கள் போல் அல்லாமல், தாம் பாடும் அரசர்களுக்கு மிகைப்படுத்தப்பட்ட புகழ் உரைகளையோ, செய்வதற்கு இயலா அருஞ்செயல்களையோ உரிமையாக்காமல், அத்துணை இயல்பினை, உண்மையோடு பட்ட உரைகளாய் அமைந்திருத்தலே ஆகும். பாடிப்புகழ் பரப்பும் புலவர்களும் இரவலர்களும் கறி உண்ணுவது, கள் குடிப்பது ஆகிய நிலைகளில் ஒரு கட்டுப்பாட்டினைக்