பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/333

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326 . - தமிழர் வரலாறு இவற்றோடு 1) முதல் இருநூற்று அறுபத்து ஆறு பாடல்களும், அவை ஒவ்வொன்றும் பாடப்பெற்ற சூழ்நிலையை விளக்கும் கொளுக்கள். 2) அந்த இருநூற்று அறுபத்தாறு பாடல்களுக்கான பொழிப்புரை, இலக்கணக் குறிப்பு, மற்றும் பிற பொருள் விளக்கக் குறிப்புக்களையும் கொண்டுள்ளன. பொழிப்புரை எந்தப் பாட்டோடு முடிகிறதோ அந்தப்பாட்டோடு கொளுவும் முடிகிறது. இவ்விரண்டும் பெரும்பாலும், பழந்தமிழ்ப்பாக்களுக்கு உரை எழுதத் தொடங்கப்பட்ட காலத்தை, அதாவது கி. பி. பன்னி ரெண்டுக்கும் பதினாலுக்கும் இடைப்பட்ட நூற்றாண்டு களைச் சேர்ந்த ஒரு பதிப்பாசிரியரால், இயற்றப்பட்டன வாதல் வேண்டும். உரை இல்லாமல், கொளுக்கள் மட்டும், முன்னூற்று ஐம்பத்தொன்பதில் மீண்டும் தொடங்கி, இறுதிவரை தொடர்கின்றன. பெரும்பாலான தமிழ்ப் பேராசிரியர்கள், இக்கொளுக் களுக்கு நம்புதற்கியலாக் கண்மூடித்தனமான பெருமதிப்பு அளித்துள்ளனர். அக்கொளுக்களில் இடம் பெற்றிருக்கும் செய்திகளைச் சான்றாக மேற்கொள்ளும்போது, புற நானூற்றுச் செய்யுட்கான கொளுவில் கூறப்பட்டுளது என்றோ, புறநானூற்றுச் செய்யுட்கான உரைநடையில் கூறப் பட்டுளது என்றோ சொல்ல வேண்டுவதற்குப் பதிலாக, இது, புறநானூற்றுச் செய்யுளில் கூறப்பட்டுளது என்றே கூறுகின்றனர். செய்யுளின் மூலங்களையும், ஆயிரம் ஆண்டுகட்குப் பிற்பட்டனவாய அவற்றின் உரைகளையும், ஒன்றாக மதித்துக் குழம்புவதைப் புலவர்கள் கைவிட வேண்டிய இனியும் காலம் கடத்தலாகக் காலம் இது. மேலும், புறநானூற்றைத் தொகுத்தவர் அவர் காலத்தில் நினைவில் இருந்த அனைத்துக் காதுவழிச் செய்திகளையும் குறித்துள்ளார் என்பதும், அப்படியே ஏற்றுக்கொள்ளப் பட்டுளது. அவரால் கொடுக் கப்பட்டிருக்கும் அனைத்துச் செய்திகளையுமே, காதுவழிச் செய்தியாக வழிவழி வந்தனவே என்பதை ஏற்றுக் கொள்வதாயினும், காதுவழிச் செய்திகள், பனித்திரள் போல் நூற்றாண்டுக்கு நூற்றாண்டு, ஒன்று பலவாகப் பெருகி, வகைவகையான வியத்தகு கட்டுக்