பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 தமிழர் வரலாறு வளைகுடாவின் தலைப்புக்கு அணித்தாகக் கொண்டு, வளர்ந்திருந்தது. அப்பகுதி மக்களாம், பல்வேறு அராபியப் பழங்குடியினர், குறிப்பாகப்புரிந்து கொள்ளமாட்டாப் புதிராக விளங்கும், சிவப்பு மனிதராம் பொயினிஷியப் பழங்குடியி னர்தாம், அப்பொருள்களைக் கொண்டு சென்றவர்; அல்லது பண்டமாற்றுச் செய்த இடைத் தரகராவர். இந்தியாவில் நாகரிக வளர்ச்சி, யூப்ரடஸ், ஆப்பிரிக்கா, மற்றும் இடம் விளங்காக் கீழை நாடுகளுக்குச் சென்று வாணிகம்புரிய, விரைந்து சுருசுருப்பாகச் செயல்படும் வாணிகக் கப்பற்படை ஒன்றை உருவாக்கிவிட்டது. அராபிய வாணிகர்கள், ஆப்பிரிக்காவில், இந்திய வணிகர்கள் இருப்பதை மேலெழுந்த வாரியாகப் பொறுத்துக் கொண்டனர். ஆனால், விலைமதிப்பற்ற நவமணிகள், இலவங்கம், மிளகு, சாதிக்காய் போலும் உணவுக்காம் மணப்பொருள்கள், மேலும் மேலும் பெருகிக்கொண்டே யிருக்கும் எகிப்தியக் கடவுள் வழிபாட்டிற்கான நறுமணப்புகை எழுப்பும் சாம்பிராணி போலும் மெழுக்குகள் பற்றிய, மிகுவருவாய் தரும் வாணிகத்தைச், செங்கடற் பகுதிக்கண் தங்கள் கையிலேயே வைத்துக் கொண்டனர். எகிப்திய அரசர்களின் செல்வ வளத்திற்குக் கூறப்படும் காரணப்படி, இதுவே, அவர்களின் பெரிதும் விழிப்போடு காத்துவந்த தனிச்சிறப்புரிமை. இதன் அடிப்படை மீதுதான் அவர்கள் வாழ்ந்தார்கள்; வளம் பெற்றார்கள். ஏடன் வளைகுடாவின் இருபக்கங்களிலும் உள்ள துறைமுகங்களில், இந்திய வணிகர்களிடமிருந்து, மஸ்லின் மணப் பொருள் களாம் இந்தியப் பண்டங்களை அவர்கள் விலை கொடுத்து வாங்கிக் கொண்டனர்; அல்லது பெற்றுக் கொண்டனர். அடுத்து, அப்பொருள்களைச் சுமந்து கொண்டு மேட்டு நிலங்களைக் கடந்து நைல் நதியின் தலைப்பிற்குச் சென்றனர்: அல்லது செங்கடல் வழியாகவும்; பாலைவனத்தைக் கடந்தும் “Gg;Qusio” (Thebes) ->ịcờeogI “G)uotbLỹsio” (Memphis) பகுதிக்குச் சென்றனர் என்று கூறுகிறார். அராபிய இடைத்தரகர்களால், எகிப்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட பொருள்கள் தென்னிந்தியப் பொருள்களாம் என்பதையும்,