பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 - தமிழர் வரலாறு பசிப்பிணி மருத்துவன் இல்லம் - அணித்தோ சேய்த்தோ கூறுமின் எமக்கே". r - - புறம் : 173. பசிக்கொடுமையால் வருந்தி, அப்பசி தீர்க்கும் புரவலனைத் தேடி அலையும் ஓர் இரவலன் பாடியதாக அல்லாமல், வேறு வகையில் இப்பாட்டை மதிப்பது இயலவே இயலாது. ஆனால், புறநானூற்றுத் தொகுப்பாசிரியரால், அது, நாடாளும் ஒர் அரசனுக்கு உரியதாக ஆக்கப்பட்டுளது. இத்தொகை நூலில், இவைபோலும் பல கொளுக்களை, எளிதில் கண்டு கொள்ளலாம். ஆகவே, பாக்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் கொளுக்கள் எல்லாம் நம்புதற் குரியனவாக ஏற்றுக் கொள்ளப்படமாட்டா எனக் கருதுகின்றேன். - - - - - - எனினும், இதற்கு நேர்மாறாகப் பெரும்பாலான புலவர்கள், கொளுக்களில் கூறப்பட்டிருக்கும் செய்திகளை வேதவாக்கியங்களாக மதித்து, பாடிய புலவர்கள், பாட்டுடை அரசர் களின் சமகால நிகழ்ச்சிகளுக்கான திட்டங்களை வகுத்து விட்டனர்; அவற்றில் குறிப்பிடப்பட்டிருக்கும் அரசர்களின் குடிவழிப் பட்டியல்களையும், அக்கால அரசியல் வரலாறு களையும் வகுக்கும் முயற்சியினையும் மேற்கொண்டு விட்டனர். ஆனால், அத்தகைய திட்டங்களுள் எந்த ஒரு திட்டமும், பிறிதொரு திட்டத்தோடு ஒத்துப் போகவில்லை. திருவாளர் கனகசபை அவர்களாலும், பிறராலும், இக்கொளுக்களிலிருந்து பெற்ற செய்திகளி லிருந்து உருவாக்கப்பட்ட ஒன்றொடொன்று முரண்படும் ஒன்பது குடிவழிப் பட்டியல்கள், எந்த நிலையிலும் ஏற்றுக் கொள்ளக் கூடியவாகக் கொள்ளப்படா. இவை அனைத் திற்கும் மேலாக, முடிந்த முடிபாக, அவ்வாறு கொள்வதற்குக் காரணம், அத்தகைய புணர் அமைப்பின் விளைவாக, அரசர்கள், புலவர்களின் இருக்க முடியாத மிக நீண்ட பட்டி யல், ஒரு குறுகிய கால கட்டத்துக்குள், அதற்கு முன்னரும் பின்னரும் இருளடைந்து கிடக்கத் திணிக்கப்படுகிறது.