பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/346

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிகாலனுக்குப் பிற்பட்ட சோழ அரசர்கள் 339 கண்டாற்போலும், ஏற்றத் தாழ்வில்லாச் சிறந்த குடியில் பிறந்து பெருக வாழ்ந்திருக்கும் வேந்தர் பலரே ஆயினும், அவர்களின் பண்பு நலங்களை எண்ணிப் பார்க்குங்கால் பாக்களாலும், பாதிகர் உரைகளாலும் பாராட்டப் பெற்றவர், ஒருசிலரே ஆவர் ; அத்தாமரையின் இலைகளைப் போல, எதற்கும் பயன்படாது, மாய்ந்து மறைந்துபோனவரே மிகப் பலராவர்; புலவரால் பாராட்டப்பெறும் புகழ் உடையார், பாகனால் செலுத்தப்படாது, தானே இயங்கவல்ல வானவூர்தி ஏறி வானுறையும் தெய்வமாகிவிடுவர் எனக் கூறக் கேட்டுளேன் யான். சேட்சென்னி! நலங்கிள்ளி ! எம் இறைவா! வளர்ந்த ஒன்று, பின் குறைந்துபோதலும், குறைந்த ஒன்று பின் வளர்ந்து நிற்றலும், பிறந்த ஒன்று பின் இறந்துபோதலும், இறந்த ஒன்று, பின் பிறந்து உளவாதலும் உலகியல் என்பதைக், கற்றுனராக் கல்லாதார்க்கும், கண்ணெதிரில் காட்டித் தெளிவிப்பான் வேண்டித், தேய்வதும் வளர்வதுமாகித், திங்கள் உலாவரும் இவ்வுலகில், நின்பால் பரிசில் வேண்டி வருவாரின் பரிசில் பெறும் தகுதி, தகுதியின்மைகளை ஆராய்வது விடுத்து, வறுமைக் கொடுமையால், உண்ணுவது ஒழிந்து வாடிக் கிடக்கும் அவர் வயிற்றினை மட்டுமே பார்த்து, அவர்க்கு வாரி வழங்கும் வள்ளண்மை உடையை ஆகுக ! நீ அழிக்கலாகா ஆற்றல் வாய்ந்த உன்னொடு, பகைகொண்டு கிடப்பார், அத்தகு அருள் உள்ளம் இன்மையால், வருவார்க்கு வழங்கமாட்டா வன்கனாளர் ஆகுக'. "சேற்று வளர் தாமரை பயந்த, ஒண்கேழ் நூற்றிதழ் அலரின் நிரை கண்டன்ன, வேற்றுமை இல்லா விழுத்திணைப் பிறந்து விற்றிருந்தோரை எண்ணுங்காலை உரையும் பாட்டும் உடையோர் சிலரே, மரைஇலை போல மாய்ந்திசினோர் பலரே, புலவர் பாடும் புகழ் உடையோர், விசும்பின் வலவன் ஏவா வான ஊர்தி