பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/349

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342 - r தமிழர் வரலாறு மாறோக்கத்து நப்பசலையார் (கொற்கையை அடுத்த சிற்றுாராம் மாறோக்கத்தைச் சேர்ந்த, பசலை படர்ந்த நெற்றியினளான ஒரு பெண்) என்ற பெண்பாற்புலவர், கிள்ளிவளவனுக்கும், அவன் காலச் சேர அரசனுக்கும் இடையில் நிலவும் அதே பகைமை குறித்து, இவ்வாறு பாடியுள்ளார். "தன்பால் அடைக்கலம் புகுந்த ஒரு புறாவின் துயரைத் தீப்பான் வேண்டிப் பகைவிலங்குகளை அழித்துக் கறைபடிந்த கால்களையுடைய யானையின் வெள்ளிய தந்தத்தைக் கடைந்து செய்த நிறைகோல் துலாத்துத் துலைத்தட்டில் அமர்ந்து தன்னையே தந்த சோழன் மரபில் வந்தவன் நீ ஆதலின் வறியோர்க்கு வழங்குதல் உனக்கு இயல்பாய் அமைந்த ஒன்றேயல்லது, உனக்கே உரிய தனிச்சிறப்பு உடையதன்று, அசுரர்க்குப் பகைவராகிய தேவர்களால் அணுகவும் மாட்டாத் திண்ணிதாய் வானத்தில் உலாவந்திருத்த கோட்டையை அழித்து ஒழித்த உன் முன்னோன் ஒருவனின் புகழ்ப் பெருமையை நோக்கின், ஈண்டுள்ள பகைவரை அழித்தல், புகழ் சேர்ப்பதாகாது. அழிக்கலாகா மறம் செறிந்த சோழர் தலைநகராம் உறையூரில் உள்ள அறங்கூர் அவையில், அறம், என்றும் நின்று நிலைபெறுமாதலின், முறைகோடாது ஆட்சி புரிதலும் உனக்குப் புகழ் தருவதாகாது. ஆகவே, வீரம் செறிந்த பல போர்க்களங்களில் வெற்றி கண்டு, கணைய மரம் எனத் திரண்ட தோள்களையும், அழகிய தலைமாலையினையும் போர்ச் செருக்கு மிக்க குதிரையினையும் உடைய வளவ! அளந்து காணலாகா உயரமும் பொன்வளமும் பொருந்திய, நெடிய முடிகளைக் கொண்ட இமயத்து உச்சியில், நாட்டப்பட்ட விற்கொடியினையும், பல்லாற்றானும் மாண்புற்ற தேரினையும் உடைய சேரன் அழிந்துபோக, அழிதல் அறியா அவன் தலைநகராம் கருவூரை அழிக்கும், உன் பெருமைமிகு வீரத்தாள்களை எவ்வாறு பாடவல்லேன்" "புறவின் அல்லல் சொல்லிய, கறையடி, யானை வான் மருப்பு எறிந்த வெண்கடைக் கோல் நிறைதுலாஅம் புக்கோன் மருக!