பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/350

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிகாலனுக்குப் பிற்பட்ட சோழ அரசர்கள் 343 ஈதல், நின் புகழும் அன்றே; சார்தல் ஒன்னார் உட்கும் துன்னரும் கடுந்திறல் தூங்கெயில் எறிந்த நின் ஊங்கணோர் நினைப்பின், அடுதல், நின் புகழும் அன்றே கெடுவின்று மறங்கெழு சோழர் உறந்ததை அவையத்து அறம் நின்று நிலையிற்று ஆகலின், அதனால், முறைமை நின் புகழும் அன்றே; மறம்மிக்கு எழுசமம் கடந்த எழுவு ஊறழ் திணி தோள் கண்ணார் கண்ணிக் கலிமான் வளவ !' . யாங்கனம் மொழிகோ யானே, ஓங்கிய வரை அளந்தறியாப் பொன்படு நெடுங்கோட்டு இமயம் சூட்டிய எம விற்பொறி, . மாண்வினை நெடுந்தேர். வானவன் தொலைய . . வாடா வஞ்சி வாட்டும் தின் . 4 பீடுகெழு நோன்தாள் பாடுங்காலே?" புறம் : 39 அடிக்குறிப்பு : - y ("வஞ்சி" என்ற சொல், நகர் ஒன்றின் பெயராகவும், மலர் ஒன்றின் பெயராகவும் வழங்கப்படும் ஆதலின், மலர் வாட, நகர் வாடாது ஆதலின், நகரைக் குறிக்க "வாடாவஞ்சி" எனக் குறிப்பிடப்பட்டுளது. இத்தகு சிலேடைச் சொல்லாட்சி, பழந்தமிழ்ப் பாக்களில் பலவாம்) . . . . . . கரிகாலன் இளையோனாக இருந்தும் தீர்த்தற்கரிய ஒரு வழக்கை, நன்கு தீர்த்துவைத்த அந்நாள் தொட்டே உறையூர், அறங்கூர் அவையால் நாடறியப் புகழ்பெற்றுத் திகழ்ந்தது. (அதிகாரம் 20 : "கரிகாலன் இள்மை" என்ற தலைப்பு காண்க) அதுபோலவே மதுரை, தமிழ்க் கல்வியால் சிறப்புற்றுத் திகழ்ந்தது.புறம்:58, அறம் நின்று நிலைபெறும் உறையூரையும். "அறந்துஞ்சு உறந்தை" (வரி:9) தமிழுக்கு உரிய மதுரையையும், "தமிழ்கெழு கூடல்" (வரி : 13) குறிப்பிடுகிறது.