பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/355

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348 தமிழர் வரலாறு பாதுகாத்து வந்த, வீரம் செறிந்த அழிக்கலாகா அரண்களை அழிக்காது விடுத்துப் பேணிக்காப்பது செய்யாது, எதிர் சென்று அழித்து, அரணகத்தாரைக் கொன்று, அவர்தம் மகுடங்களை ஆக்க உதவிய பசும்பொன்னால், வீரக்கழல் செய்து, உன் கால்கள், பொலிவு பெறப் புனைந்து கொண்ட பேராண்மையாளன் நீ". "நீயே, பிறர் ஒம்புறு மறமன் எயில் ஒம்பாது, கடத்து, அட்டு, அவர் முடிபுனைந்த பசும்பொன்னின் அடியொலிக் கழல் தைஇய வல்லாளனை, வயவேந்தே" - - புறம் : 40 , 1-5. சோழன், தன் பகைவனுக்குத் தேர்ந்து வழங்கிய நாகட்தக நெறியல்வா. நனிமிகக் கொடிய தண்டனை, அவன் அரணைத் தலைமட்டமாக அழித்ததும், தன் பகைவனாம் சேரனுக்கு உரிய தலைநகரை நண்பகல் போதிலேயே தீயிட்டு அழித்தும் ஆம் "குட்டுவன் அகப்பா அழிய நூறிச், செம்பியன் பகல் தீ வேட்ட ஞாட்பு" - நற்றிணை : 14 : 3-5. பண்டை நாட்களில் இருந்ததுபோல், போர், ஒருவீர விளையாட்டாக, இல்லாமல், கொடிய காட்டுமிராண்டிச் செயலாகி விட்டது. பிற்காலத்தைச் சேர்ந்த மற்றொரு சேர அரசனாம், தொண்டித் தலைவன் இரும்பொறை என்பான், மூவன் என்பான் ஒருவனை வெற்றி கொண்டு அவனுடைய, முள்போல் கூரிய, வலிய பற்களைப் பிடுங்கி, அவற்றைத் தன் கோட்டை வாயிற் கதவில் பதித்து வைத்தான். - "மூவன் - முழுவலி முள்ளெயிறு அழுத்திய கதவின் கானலம் தொண்டிப் பொருநன்" - - நற்றிணை : 18 : 2-4