பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/356

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிகாலனுக்குப் பிற்பட்ட சோழ அரசர்கள் 349 அடிக்குறிப்பு : கிள்ளி வளவன் புகழ்பாடிய புலவர்களுள், இருவர், நலங்கிள்ளியையும் பாடிய கோவூர்கிழாரும், ஆலத்துார் கிழாருமாவர். கிழார்' என்பதன் பொருள், ஒன்றை உரிமையாகக் கொண்டவர், அல்லது ஒன்றிற்கு உரிமை உடையவர் என்பது பொருளாம். ஆகவே, புலவர்கள், ஆலத்துார் கிழார் அல்லது கோவூர் கிழார் எனப் பெயரிடப் படக்கானின், அச்சொற்களை, முறையே, ஆலத்துார்ப்புலவர் அல்லது கோவூர்ப் புலவர் என்பதாகப் பொருள் கொள்ளுதல் வேண்டும். இத்தொகை நூல்களில் இடம் பெற்றிருக்கும் பாக்களைப் பாடிய பல புலவர்கள், இயற்பெயர் உடையராகார், ஊர்ப் பெயரினாலேயே பெயரிடப் பட்டுள்ளனர். ஆரியக்கடவுள் பெயர்களை மக்களுக்குச் சூட்டும் வழக்கம் நடைமுறைக்கு வந்த கி. பி. ஆறாம் நூற்றாண்டிற்கு முன்னர், இயற்பெயர்கள் அருகி இடம் பெற்றதாகவே தெரிகிறது. அக்காலத்திற்கு முன்னர் எப்பெயர் குட்டப்பட்டிருந்தாலும், அவை, "இரும்பிடர்த் தலையார்” என்பது போலச் சிறப்பு குறித்து இடப்பட்ட பெயராகவும், 'மாங்குடி கிழார்' என்பது போல, ஊர்ப்பெயராகவும், 'இளநாகனார் என்பது போலச் சிறப்பு அடைஅடுத்த சாதிப் பெயராகவுமே இருக்கும். அரசர்கள் பெயர்களிலும் இதுவே நிலையாம். இன்றும், சிற்றுார்களில், மக்கள் இயற்பெயர் உடையராயினும், பழங்கால வழக்கமாம், சிறப்புப் பெயரிட்டு அழைக்கப் பெறுதல் பெருவழக்காம். ஆகவே, இவ்விரு சோழர்களும், ஒருவர்பின் ஒருவராகவோ, அல்லது, ஒரே காலத்தில் வேறு வேறு பகுதிகளில் ஆட்சிபுரிந்த நெருங்கிய உறவினராவர்; பெரும்பாலும், உடன் பிறந்தவராவர். ஆனால், அவர்கள் உறவு முறைகுறித்த எவ்விதக் குறிப்பும், பாக்களில் இடம் பெறவில்லை. - . . ." . . . . சிலப்பதிகாரம், சேரவேந்தன் செங்குட்டுவனின் மைத்துனனாகிய வளவன் கிள்ளி என்பான் ஒருவனைக் குறிப்பிட்டு, அவ்வளவன் கிள்ளியின் பகைவர்களாகிய சோழ