பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/359

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352 தமிழர் வரலாறு. இப்பேருலகில் ஒருவரும் இலர் எனக் கூறக்கேட்டதாகவும் கூறுகிறான். . . "நாவலந் தீவில் இந்நங்கையை ஒப்பார் யாவரும் இல்லை ; இவள் திறம் எல்லாம் கிள்ளிவளவனொடு கெழுதகை வேண்டிக் கள்ளவிழ் தாரோய் கலத்தொடும் போகிக் காவிரிப் படப்பை நன்னகர் புக்கேன்". - மணிமேகலை : 25 : 12 - 16. இந்தப் பகுதியிலிருந்தே, திரு.கனகசபைப் பிள்ளை அவர்கள், நாம் ஆய்ந்து கொண்டிருக்கும் கிள்ளிவளவன், மணிமேகலை காலத்துப் புகார்க் காவலன் ஆவன் எனக் கொண்டுள்ளார். கிள்ளி, வளவன், என்ற சோழ இளவரசர் எனும் பொருள் உடைய மேலும், புறநானூறு பாராட்டும் கிள்ளிவளவன் உறையூர் அரசனே அல்லது புகார் அரசன் அல்லன் ஆதலின், மணிமேகலை கூறும் கிள்ளிவளவனுக்கும், புறம் பாராட்டும் கிள்ளிவளவனுக்கும் எவ்வித உறவும் இல்லை. - இக்காலத் தமிழ்ப்புலவர்களின் பாக்களில், ஆரியக் கருத்துகள், மிகப் பெருமளவில் இடம் பெற்றிருக்கவேண்டும் என எதிர்பார்க்க வேண்டியதே. ஆலத்துார் கிழார், பார்ப்பனர்க்குக் கொடுமை செய்வதால் உளவாகும் பாவம் குறித்துப் பேசுகிறார் , தர்ம சாஸ்திர ஆணைகளைக் குறிப்பிடுகிறார். - r "பார்ப்பார்த் தப்பிய கொடுமை", "அறம் பாடிற்று", . - புறம் : 34 : 3-7. இக்கிள்ளிவளவன் காலத்தில், ஆரியக் கருத்துகள் பரவியது மட்டுமல்லாமல், அவன்தானும் எரிக்கப்படாமல் புதைக்கப்பட்டுள்ளான். அவன் இறப்பு, புலவர் மூவரால் வருந்திப் பாடப்பட்டுளது. அவர்களுள் ஒருவர், அம்மன்னன் அடக்கம் செய்யப்படவேண்டிய தாழியைச் செய்து தரவேண்டிய குயவனை விளித்து, மன்னனை அடக்கம்