பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/362

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிகாலனுக்குப் பிற்பட்ட சோழ அரசர்கள் 355 Grant and Thriuvalangadu Inscription ; also S. I. I. Vol. II Part III. These later inscriptions however confuse the order of sequence of these two early Solas). Jirg&ulb Gail' s opCiròurrø Liaopuz சோழன், பெருநற்கிள்ளி ஆவன்; ஆகவேதான், அப்பெருஞ் செயலைச் சிறப்புடைய தன் அடையாளமாகக் கொண்டான். இப்பெருஞ்செயல், தமிழ் நாட்டு மக்களின் கலாச்சாரத்தில் ஆரியக் கலப்பு பெருமளவில் வளர்ந்துவிட்டது என்பதையும் உணர்த்துகிறது. இது அவன் புகழ்பாடும் பாக்கள் ஒன்றில், பொருள் வேண்டி வந்து நிற்கும் பார்ப்பனரின் ஈரம்பட்ட கையில், பூவையும், பொன்னையும், புனலொடு சொரிந்த அவன் செயல் பாராட்டப் பெற்றிருப்பதாலும் உறுதி செய்யப்படுகிறது. "ஏற்ற பார்ப்பார்க்கு ஈரங்கை நிறையப் பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து” - புறம் : 367 , 4 - 5. மூவேந்தர்களும், புலவரால் விளிக்கப்படும்போது, ஆரியக் கொள்கையின் அடிப்படையில் கொள்ளப்பட்ட ஒர் உவமையும், அப்பாட்டில் இடம் பெற்றுளது. அத்தொடர் இது இருபிறப்பாளராம் பார்ப்பனர் வளர்க்கும், முத்தீப் போல, அழகுற வீற்றிருக்கும், வெண்கொற்றக் குடைகளையும், வெற்றிக் கொடி பறக்கும் தேர்களையும் உடைய மூவேந்தர்காள்!" "முத்தீ புரைய, காண்தக இருந்த கொற்ற வெண்குடைக், கொடித்தேர் வேந்தீர்!" - புறம் : 367 : 1.3 - 14. இப்பாடற் பகுதியில் குறிப்பிடப்பட்டிருக்கும் மூன்று அரசர்கள், கொளுவில் இருந்து நாம் தெரிந்து கொள்ளும் வகையில், புற்நானூறு, தொகை நூலாகத் தொகுக்கப்பட்ட காலத்துக்கு, அதிகம் முற்படாத காலத்து, தமிழரச குலங்களின் கடைசி அரசர்களாம் சேரமான் மாரிவெண் கோவும், பாண்டியன் உக்கிரப்பெருவழுதியும், சோழன்