பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 % தமிழர் வரலாறு மிகப்பெரிய அளவில் பயன்படுத்தப்பட்ட நறுமணத் தைலங்களை வடிக்க உதவும் இனிய மணம் கமழும் மரங்களையும் இந்தியா பெருமளவில் உற்பத்தி செய்தது என்பதை அவரால் மறுக்க இயலாது. எகிப்தியர்களும், அஸ்ரியர்களும், இந்தியா பெருமளவில் கொடுத்து உதவக்கூடிய லவங்கம் மிளகுபோலும் மனம் தரும் உணவுப் பொருள்களுக்காகவும், முத்து மற்றும் நவரத்தினங் களுக்காவும் ஆர்வத்தோடு காத்திருந்தனர் என்பது நன்கு தெரிந்த ஒன்று. புதிய கற்காலம் முதலாகவே இந்தியர்கள் பருத்தியாலான ஆடைகளைப் பெருமளவில் நெய்தனர்; அவற்றிற்கு வண்ணமும் ஊட்டினர். நெய்யவும் மெருகு ஏற்றவும் துணை செய்யவும் கல்லால் ஆன மழமழப்பாகும் கல் உட்படப் பல்வேறு தொழிற்கருவிகள் கண்டு பிடிக்கப்பட்டிருப்பது இதை உறுதி செய்யும். இவ்வளவு இருந்தும் திருவாளர் கென்னடி அவர்கள், ஒரு பக்கம் இந்தியா மறுபக்கம் எகிப்து அளபிரிய நாடுகள் ஆகிய இவற்றிற்கிடையில் நடைபெற்றிருந்த பழங்கால வாணிகத் தொடர்புக்கான, இவ்வகச் சான்றுகளைக் காண மறுத்துக் கண்களை முடிக்கொள்கிறார். பாபிலோனிய ஆரிய மக்கள் வழங்கிய ஆப்பு வடிவ எழுத்து முறை கொண்ட் அக்கேடிய மொழியும் (Accadian) எபிரேய மொழியும் (Hebrew)அராபிய மொழியும் சமஸ்கிருத தமிழ் மொழிகளிலிருந்து கடன் வாங்கிய வாணிகப் பொருள்களைக் குறிக்க வழங்கும் சொற்கள் அளிக்கும் அகச்சான்றுகளின் மதிப்பை அவர் புறக்கணிக்க முயல்கிறார். ஜெர்மானிய வரலாற்றுப் பேராசிரியர்களால் சான்றுகாட்டி நிறுவப்பட்ட அளபிரிய மக்களோடு ஆரியர்கள் கொண்டிருந்த தொடர்பினை உறுதிசெய்யும் வேத அகச் சான்றுகளைச் சிறிது சிறிதாக இல்லையாக்க முயலுகிறார். இடைத் தரகர்களால், கடல் வாணிகம் பரந்த அளவில் வளர்ச்சி பெறுவதற்குத் தடையாக நிற்கக்கூடிய சில இடையூறுகளைப் பெரிதுபடுத்துகிறார். இறுதியாக அதற்கான் போதிய வலுவான அகச் சான்று இல்லை என முடிக்கிறார்.