பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/386

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிய அரசர்கள் 379 நிலையாலும் பெரியவர்கள், நம் பகைவனாகிய இவனோ நனிமிகச்சிறியவன் . ஆனால், வென்று கொள்ளலாம் பொருளோ அளப்பரியன்" என எண்ணினர். "விழுமியம்; பெரியம் யாமே! நம்மில் - பொருநனும் இளையன் கொண்டியும் பெரிது" - புறம் : 78 5-6. படையெடுத்து வந்தாரை, நெடுஞ்செழியன், மதுரையி லிருந்து துரத்தி அடித்தான். புலவர் இவ்வாறு கூறுகிறார்: "மலர்மாலையினையும், தலையில் மை பூசப்பட்ட யானைப் படையினையும் உடைய, வீரம் செறிந்த போரில் வல்ல பாண்டியன், எக்காலத்தும் நின்று போகாது தொடர்ந்து நடைபெறும் விழாக்கள் மலிந்த, தன் மதுரை மாநகர்க்கு, அணித்தாக நடைபெற்ற போர்க்களத்தில், தம்முள் ஒன்றுகூடி வந்து போரிட்ட சேர, சோழர்களாம் இரு பெருவேந்தர் களின் கடல் போல் பரந்த பெரும்படையினை நிலை குலைந்து போகுமாறு தாக்கி ஒலிக்கும் அவர் முரசுகள், ஒலி அவிந்து போர்க்களத்தில் வீழ்ந்து கிடக்கத் தோற்று ஓடும் அவர் புறமுதுகைக் கண்டான்". - "மலர்தார், - மையணி யானை, மறப்போர்ச் செழியன், பொய்யா விழவின் கூடற் பறந்தலை உடன்இயைந்து எழுந்த இருபெரு வேந்தர் கடல்மருள் பெரும்படை கலங்கத் தாக்கி, இரங்கிசை முரசும் ஒழியப், பரந்து அவர் ஒடு புறம் கண்ட" - அகம் : 116 : 12 : 12-18. இது, அவன் காலத்தில் பாடப்பட்ட பாட்டு அன்று: நெடுஞ்செழியன் காலத்திற்குப் பின்னர்ப் பரணரால், அவருடைய நினைவில் நின்ற நிகழ்ச்சியாகப் பரத்தையர் ஒழுக்கம் மேற்கொண்டுவிட்ட ஒரு கணவன், அப்பரத்தை யோடு புதுப்புனல் ஆடினான் என்பத குறித்து ஊரில் பலர்