பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/389

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

382 | தமிழர் வரலாறு "கொய்கவல் புரவிக், கொடித்தேர்ச் செழியன், ஆலங் கானத்து அகன்தலை சிவப்பச் சேரல், செம்பியன், சினங்கெழு திதியன், போர்வல் யானைப், பொலம்பூண் எழினி, நார்அரி நறவின் எருமை யூரன், தேம்கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின், இருங்கோ வேண்மான், இயல்தேர்ப் பொருநன், என்று எழுவர் நல்வலம் அடங்க, ஒருபகல் முரசொடு, வெண்குடை அகப்படுத்து உரைசெலக் கொன்று களம் வேட்ட". - அகம் : 36 : 13 - 32. இதுவும் மேலே கூறியவாறு ஒர் உவமையாகவே இடம் பெற்றுளது. இப்போர்க்கள நிகழ்ச்சிக்குப் பிறகு, அவன், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என அழைக்கப்பட்டான்; அப்போர்க்கள நிகழ்ச்சிகளை, உவமைகளாக மேற்கொள்ளும் அளவிற்கு, அப்போர், அவன்காலப் புலவர்களைப் பெரிதும் கவர்ந்துவிட்டது. ஆலம்பேரி சாத்தனார் என்ற புலவர், காற்றென விரையும் நெடிய தேரினையும், வழங்கத் தவறா வண்மையினையும் உடைய, பாண்டியன் நெடுஞ்செழியன், தலையாலங் கானத்துப் போரை வென்று உயர்த்திய வேற்படை குறித்துப் புகழ்ந்து பேசுகிறார் : "காலியல் நெடுந்தேர்க், கைவண் செழியன் ஆலங் கானத்து அமர்கடந்து உயர்த்த, Gaడు." - அகம் : 775 : 10 - 12. பழந்தமிழ்ப் புலவர்களாம் பேரறிஞர் குழாத்தின் பிற்கால உறுப்பினராம் கல்லாடனார், "பொன்னால் அணி செய்யப்பட்ட நெடிய தேர்ப்படையினையுடைய பாண்டியப் பேரரசனாம், கணைய மரம் போலும் திண்ணிய வலிய தோளினையும், தன் விருப்பிற்கேற்ப இயங்கவல்ல