பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/395

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

\ 388 தமிழர் வரலாறு நாற்ற உணவின் உருகெழு பெரியோர்க்கு மாற்றரு மரபின் உயர்பலி கொடுமார் அந்தி விழவின் துரியம் கறங்க” - மதுரைக்காஞ்சி : 433 - 460. அவ்விளக்கம், இன்றைய நடைமுறையில் இருக்கும், எந்த வழிபாட்டு முறையோடும் இனம்காண மாட்டா அளவு, தெளிவற்றதாக அமைந்துளது. உறுதியாக வரையறுக் கப்பட்ட பிற்காலத்திய வழிபாட்டு நெறி எதனோடும், இனம் காட்டமாட்டா அளவு, வழிபாட்டு முறையும், பெரும்பாலும் நெகிழ்ச்சி உடையதாகவே அமைந்துளது. - இதுவல்லாமல், விஷ்ணு வழிபாடும் இடம்பெற்றிருந்தது. பேரொளி வீசும் சிறந்த அணிகலன்களையுடைய, அறிவு நன்மை வாய்ந்த சிறு பிள்ளைகள், கூட்டத்தில் பிரிந்து போய்விடாவாறு காத்தற்பொருட்டுத் தம் கைகளால், இறுக அணைத்து, அவர் மேல் கொண்ட அன்புப் பெருக்கால் ஆரத் தழுவிக் கொண்டு, மகரந்தம் செறிந்த, தாமரை மலரைப் பற்றினாற் போன்று, அப்பிள்ளைகளின் கைகளைத் தம் கைளால் பற்றிக் கொண்டு, தாமும் அவரும் ஓரிடத்தே இருக்கக் கண்டார் விரும்பும் அழகு வாய்ந்த பேரிளம் பெண்டிர், வழிபாட்டுக்கு வேண்டும், பூவும், புகையும் கொண்டு நாவார வாழ்த்துதலால் சிறப்புற்று, அவர்களைக் காக்கும் கடவுளாம் விஷ்ணு இடங்கொண்டகோயில்." "திண்கதிர் மதாணி ஒண்குறுமாக்களை ஒம்பினர்த் தழிஇத், தாம் புணர்ந்து முயங்கித், தாதுஅணி தாமரைப் போது பிடித்தாங்குத் - தாமும் அவரும் ஒராங்கு விளங்கக், காமர் கவினிய பேரிளம் பெண்டிர், பூவினர், புகையினர், தொழுவனர், பழிச்சிச் சிறந்து புறம் காக்கும் கடவுள் பள்ளி' - - மதுரைக்காஞ்சி : 461 - 467.