பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/396

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிய அரசர்கள் - 389 வைதீக வழிபாட்டு முறையும், சிலரால் பின்பற்றப்பட்டது. "சிறந்த வேதங்களை, அவற்றின் பொருள் விளங்குமாறுபாடி, அவை கூறும் மிகச் சிறந்த ஒழுக்க நெறியில் வாழ்ந்து, நால்வகை நிலவளமும் வாய்ந்த இந்நில உலகில் சிறந்த தலைமையுடையார் தாம் ஒருவரே ஆகுமாறு உயர்ந்து, உயர்ந்த நிலையுடையதான வீட்டுலக இன்பத்தை, இவ்வுலகில் இருந்தவாறே அடைவதற்கு வழியாக, அற வழியில் திரியாது நின்று, உயிர்கள் மாட்டு அன்பு செலுத்தும் உயர்ந்த உள்ளம் வாய்ந்த பெரியார்கள், விரும்பி இனிதே வாழும் மலையைக் குடைந்து ஆக்கினாற்போலும், அந்தணர் குடியிருப்புக்கள்." "சிறந்த வேதம் விளங்கப் பாடி, விழுச்சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து, நிலம்அமர் வையத்து ஒருதாம் ஆகி, உயர்நிலை உலகம் இவண் நின்று எய்தும், அறநெறி பிழையா, அன்புடை நெஞ்சின் பெரியோர் மேஎய் இனிதின் உறையும் குன்று குயின்றன்ன அந்தணர் பள்ளி' - மதுரைக்காஞ்சி : 468 - 474, சமண, பெளத்த முனிவர்கள், அடுத்த நூற்றாண்டில் நகரத்தே மடங்களில் வாழ்வது போல் அல்லாமல், நகர்ப்புறத்தே பூம்பொழில்களில் வாழ்ந்தனர்: "வண்டுகள் வந்து மொய்க்குமாறு, மலரும் பருவம் வந்துற்ற, தேன் நிறைந்திருக்கும் தோற்றத்தை உடைய மலர்களையும், மணம் தரும் புகைகளையும் ஏந்தி, இரவு உண்ணாவிரதம் கொண்டோர், வாழ்த்தாநிற்ப, இறந்த காலத்தையும், இந்நிலவுலக நிகழ்ச்சிகளையும் முழுமையாக ೭T। வல்லாரும், தமக்கு ஏற்புடைய விரதங்களையும், அவ் விரதங்கள் மேற்கொள்வதால் தளர்ந்துவிடாயாக்கை நலத்தையும், கல்வி கேள்விகளால் நிறைந்தும் செருக்குதல் அறியா அடக்கத்தையும் உடைய ஆன்றோர் பெருமக்கள், ஒன்று கூடியிருந்து நோற்பதற்குக் கல்லைப் பொளிந்தாற்