பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/397

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

390 தமிழர் வரலாறு போன்ற ஒடுங்கிய வாயையுடைய நீரிநிறை குண்டிகையைப் பல வடங்களைக் கொண்ட நூல் உறியில் ஏந்தி, உலகத்து உயிர்களுக்கு அருளுதலையே செய்ய இருந்து அறம் நோற்கும், கண்டார் வியக்கும் கவின்மிகு பூஞ்சோலைகளாம் அமண் பள்ளிகள்." "வண்டுபடப் பழுதிய, தேன்.ஆர் தோற்றத்துப், பூவும், புகையும் சாவகர் மழிச்சச், சென்ற காலமும், வருஉம் சமயமும், இன்று இவண் தோன்றிய ஒழுக்கமொடு நன்கு உணர்ந்து, வானும், நிலனும், தாம் முழுதுணரும், சான்ற கொள்கைச், சாயா யாக்கை, ஆன்று அடங்கு அறிஞர், செறிந்தனர் நோன்மார், கல்பொளித்தன்ன இட்டுவாய்க் கரண்டைப் பல்புரிச்சிமிலி நாற்றி, நல்குவரக், இறும்பூது சான்ற நறும்பூஞ் சேக்கை" - மதுரைக்காஞ்சி : 475 - 483 : 487. மேலே எடுத்துக்காட்டிய நான்கு பகுதிகளுக்கும் பொருள் விளக்கம் காண்பதில், உரையாசிரியர் பொருள் விளக்கத்தி லிருந்து முழுவதும் மாறுபட்டுள்ளேன். இவ்வடநாட்டு வழிபாட்டு நெறிகள், பழைய தமிழர் வழிபாட்டு நெறிகளை, இடங்கொண்டு விடுவதோ, அழிந்து விடுவதோ செய்யவில்லையாதலாலும், ஏழாவது முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரையான காலத்தில், அவை நடந்து கொண்டதுபோல், தமக்குள்ளே கடுமையான போர் மேற்கொண்டு விடாமல் அடுத்தடுத்து இயங்கி வந்தன. மதுரை மாநகர் : ஒரு விளக்கம் : திருவாளர் சுந்தரம்பிள்ளை அவர்கள், மதுரைக் காஞ்சியின் பெரும் பகுதியை, மதுரை மாநகரின் விளக்க