பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/399

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392 தமிழர் வரலாறு பெரிதாம் என்புதை உணர்த்துவதாக இருக்கும். நம் காதுகள், இவ்வாறு, எல்லாத் திசைகளிலிருந்தும் எழும் பல்வேறு ஒலிகளால் தாக்குற்றிருக்க, சூழ இருப்பனவற்றைக் கண்டுகளிப்பதில், தம்மை, மீண்டும் ஒப்படைத்துக் கொள்கிறோம். முதன் முதலில் நம் கண்ணில் படுவன எங்கு நோக்கினும், நம் கண்களை மறைக்கும் கொடிக் காடுகள். நகரில், காலம் தவறாமல் முறையாக நடைபெறும் விழாக்கள் குறித்து ஏற்றிய கொடிகள் காற்றில் பறக்க்விடப்பட்டிருக்கும் ஒருபால், பெரும் படைத்தலைவர்கள், நாட்டிற்காக ஆற்றிய அரும்பணிகளைப் பாராட்டி எழுப்பிய கொடிகள், அலை அலையாகப் பறந்து கொண்டிருக்கும் மற்றொரு பால்; இங்கும், அங்கும் காணும் இடம் எங்கும் விற்கும் கள்ளின் இணையிலா தலம் நவிலக் கள்கடைகள் தோறும் கட்டிவிடப்பட்டிருக்கும் இன்பத் துகிற்கொடிகள் களிநடம் புரியும் ஒவ்வொரு வாணிகம் அல்லது வணிகக் குழுவும், தத்தமக்கே உரிய தனித்தனிக் கொடிகளையும் கொண் டிருந்தன. நாலாப் பக்கங்களிலும் அலைந்து கொண்டிருக்கும் நம் கண்களை, ஆங்கிருந்து மீட்டு, நமக்கு அணித்தாக உள்ளனமீது போக்கின், நம்மைச் சூழ இருக்கும் மக்கள் கூட்டம், பண்ணியம், பன்னிறமலர்கள், மன மாவைகள், மணம் தரு பொருகள். வெற்றிலை, பாக்கு, மற்றும் இன்ன பிற பொருட்களை ஏந்திவிற்கும் சிறுவணிகர்களை மையமாக் கொண்டு, சின்னம் சிறு வட்டங்களாகத் தனித்தனியே சுழன்று சுழன்று வருவது காணலாம். மதுரை, ஒருபடைத்தள நகரமும் ஆம் ஆதலின் மாநகர் வீதிகளில் போக்குவரத்து, அவ்வப்போது, அரசனின் நாற்படை நடமாட்டத்தால் நிலைகுலைந்து போவதும் உண்டு. கொடிய சுழற்காற்றால் மேலுண்டு நங்கூரக் கல்லோடு பிணிக்கப்பட்ட வலியகயிறு அறுபட்டுப் போகக் கடலின் நெடுஞ்சுழியில் அகப்பட்டு அலையும் கலங்கள் போலப் போர்க்களிறுகள் கட்டுத் தறிகளோடு பிணிக்கப்பட்ட கயிறுகளை அறுத்துக்கொண்டு, கூடத்தினின்றும் வெளிப்பட்டு, வீதிகளில் புகுந்து விடும். தேர்கள், காற்றென விரையும் : படைப் பயிற்சி குறித்துக் குதிரைகள் விரைந்து நடைபோட்டுச் செல்லும். இவை