பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/400

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிய அரசர்கள் 393 அனைத்திலும் கேடாகக் கள்ளுண்டு களிக்கும் படைவீரர் கூட்டம். இடையூறு விளைக்கும் இவை, வீதிகளின் ஊடே செல்லுங்கால், மக்கள்கூட்டம், உயிருக்கே ஊறுநேர்ந்து விட்டாற்போல் அஞ்சி விதப்புற்று, இங்கும் அங்கும் ஒடிச் சிதறுண்டு போவர். இவ்வமளி அடங்கி, அமைதி நிலவ சிறிது நாழிகை ஆகும். அதன் பின்னர்ப் பண்டங்களைத் தலையில் சுமந்து விற்பாரும், சின்னம் சிறு வணிகர்களும், வீதியின் இருமருங்கிலும் உள்ள பல வடுக்கு மாளிகைகளின் நிழல்களில், தம் வாணிகத்தை மீண்டும் தொடங்கிவிடுவர். தங்கள் மகளிரினத்துப் பலவீனத்தைத் தெரிந்துவைத்திருக்கும் முதிய பெண்டிர் சிலர், மனைகளின் அகத்தே வாழ்வார். வெளிப்போந்து, தவறாது வாங்கிச்செல்லத் துண்டும் வகையில், தாம் விற்கும் இனிய பணியாரங்கள், மனம்நாறும் மலர்கள் ஆகியவற்றின் நலங்களை நாவாரக் கூறியவாறே, வீடு வீடாகச் செல்வது, களிப்பூட்டும் கண்கொள்ளாக் காட்சி ஆகும். கார்மேகம் குடித்து விடுவதால் குறைவதோ, கடுமழைவரவால் மிகுவதோ செய்யாது, என்றும் ஒரு படித்தாகவே இருக்கும் கடல்போல, மக்கள் வாங்கி விடுவதால் குறைந்து போவதோ, புதுவரவால் மிகுந்து போவதோ இல்லாமல், வாணிகம், என்றும் ஒரே படித்தாக, இரவு பகல் எப்போதும் நடைபெற்றுக் கொண்டேயிருக்கும். நகரில், காலம் விரைந்து கடந்து கொண்டே உளது, நாட்பொழுது பையப் பையக் கழியக் காட்சியும் மாறுகிறது. மாலைப் பொழுது கழியும் அக்காலத்தில், அந்நகரத்துப் பெரு நிதிக்கிழவர்கள், காலாட்கள் சூழ்ந்துவரத் தேர் மீதும், குதிரைகள் மீதும், வீதிகளில் உலாவருவர். அந்திவானத்தைச் செந்நிறத்தை நினைவூட்டும், செந்நிறம் வாய்ந்து, ஒள்ளிய பூத்தொழில் செய்யப்பட்ட மேலாடை அணிந்திருப்பர். பொற்பிடி வாய்ந்த வாள், அவர் இடையில் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும். இறவாப் புகழ் வாய்ந்த வெற்றி மாலைகள் அவர் மார்பில் கிடந்து புரளும் மிகப்பெரும் செல்வர் ஆதலின், நாளின் வெப்பம் மிகு நாழிகைப் போதினை, இவர்கள், தங்கள் இல்லத்தே, இன்பச் சூழ்நிலைகளில், இனிதே கழிப்பர். வானுலக மாதர்கள் வந்து