பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/402

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிய அரசர்கள் 395 ஆடைகள் நெய்வார், அழகிய உடைகள் தைப்பார், மணப்பொருளும், மலர்களும் விற்பார், எத்தகு நிகழ்ச்சி யையும், இனிய உவமைகள் மூலம், வண்ணக்கலவையில் வரைந்து காட்டவல்ல ஒவியர் போலும் கைவினைஞர்கள் வாழும். குடியிருப்புக்கள் வரிசை வரிசையாக இடம் பெற்றிருக்கும். இவர்களும், இவர் போலும் பிறருமாகிய மாநகரத்து மக்கள், வாணிகம் கருதியும், வளமார் இன்ப நாட்டம் கொண்டு, வீதிகளில், இயங்குதற்கு இனி இடம் இல்லையாமாறு வந்து குவிந்துவிடுவதால், நாம், ஒருவர் காலோடு, ஒருவர் கால் வந்து நிற்க வேண்டியதாகிறது. அம்மக்கள் கூட்டம் எழுப்பும், காது செவிடு படுத்தும் பேரொலிகள் ஒரு பால் இருக்க, நகரின் நால்வேறு தெருக்களிலும், பலாச்சுளை, மாங்கனி, மற்றும் பல்வேறு கனிவகைகள், காய்கள், கீரைகள், கற்கண்டு, உண்டற்கினிய வள்ளிக்கிழங்கு, உண்பார் அனைவரும், புகழப்பண்ணப் பட்ட இறைச்சி கலந்த இனிய சோறு ஆகியவற்றை, வருவார்க் கெல்லாம் விருந்தாகப் படைப்பது நிகழும் அந்தி அங்காடியின் ஆரவாரம், நாளங்காடி ஆரவாரத்திலும் மிக்க ஒலிக்கும். ஆங்குக்காணலாம் அத்துணைக் காட்சிகளும், காற்றால் கொண்டு வரப்பட்டு கரை சேர்ந்திருக்கும் கலங்கள், பண்டங்கள் இறக்கப்பட்டும், ஏற்றப்பட்டும், பாய்விரித்த, எழுந்து அடங்கும் கடல் நீரில் மீண்டும் புகுந்து ஒடும் கடற்கரைக் காட்சியைக் காட்ட வல்லவாம். ஞாயிறு வீழ்ந்து விட்டது; திங்கள் எழுந்து விட்டது. என்றாலும், நகரம், இன்னமும் ஒய்வு காணவில்லை. மனைகளில் விளக்கேற்றல், மாநகரத்து அழகிய மகளிர், தங்களை, இன்ப நாட்டங்களுக்குத் தயார் செய்து கொள்ளும் அறிகுறியாய் அமைந்தது. அதுபோலவே, ஆடவர், மகளிர் என்ற இரு சாராரிலும், நாணித்தலைகுனியவைக்கும் பழிமிகு இழிகுணம் வாய்ந்தார், புறம் போந்து திரிவதற்கும், அவருள்ளும் ஒரு சிலர், பாகனையே கொன்று வீழ்த்துமளவு, களிறுகள் மதங்கொண்டு விடும்போது, அவை, மேலும் ஓடாவாறு, அவற்றின் கால்களைக் குத்திப் புண்ணாக்கித் 26