பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/407

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

400 - தமிழர் வரலாறு கான மாட்டாது, கொடியன் எம் காவலன் என, என் அரசைப் பழிதூற்றும் கொடுங்கோலன் ஆவேனாகுக நான்; சிறந்த தலைமையும் பரந்த கேள்வியும் வாய்ந்த மாங்குடி மருதன் முதலாக உள்ள, உலகெலாம் புகழும் புலவர் பெருமக்கள், என்னையும் என் நாட்டையும் பார்ாட்டுவதைக் கைவிடுவாராக! என்னால் புரக்கப்பட வேண்டிய என் சுற்றத்தாரின் வறுமைத் துயர்க் கொடுமை பெருமளவு, நான் வறுமையுற்றுப் போவேனாகுக." : "நகுதக்கனரே, நாடுeக்கூறுநர்; @೧೧TLಣಿ இவன் என உளையக் கூறிப், படுமணி.இ ட்டும் பாவடிப் பனைத்தாள் நெடுநல் யானையும், தேரும், மாவும், படையமை மறவரும் உடையம்யாம் என்று, உறுதுப் பஞ்சாது உடல்சினம் செருக்கிச் சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை, அகுஞ்சமம் சிதையத் தாக்கி, முரசமொடு ஒருங்கு அகப்படே என்ாயின், பொருந்திய என்நிழல் வாழ்நர், செல் நிழல் காணாது கொடியன் எம் இறை எனக் கண்ணிர் பரப்பிக், குடிபழிதூற்றும் கோலேனாகுக! ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி, மாங்குடி மருதன் தலைவனாக, உலகமொடு நிலைஇய. பலர்புகழ் சிறப்பின் புலவர் பாடாதுவரைக என் நிலவரை புரப்போர் புன்கண்கூர - இரப்போர்க்கு ஈயா இன்மை யான் உறவே!" х - - புறம் : 72. தன் அரசவைப் புலவர் குழாத்தின், மாங்குடி மருதனாரின் தலைமை பற்றிய நெடுஞ்செழியனின் நற்சான்றிதழ்,