பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமனும் தென் இந்தியாவும் r 33 என்பதை நம்பவும் இயலாது. அதற்கு ஒரு காரணம், இராமன் வேத காலத்தின் முக்கூற்றில், இரண்டாம் கூற்றின் இறுதிக்காலத்தில் வாழ்ந்திருந்தான். அக்காலத்தில் இயற்றப் பட்ட தோத்திரப் பாடல்கள், அவற்றிற்கு முற்பட்டனவும், பிற்பட்டனவும் ஆகிய காலத்திய பாடல்களைப் போலவே, வேத வழக்கு மொழியில் உள்ளன. ஆகவே இராமர் காலத்து இராமாயணமும் அதே வேத வழக்கு மொழியில் "சந்தாஸ்" எனப் பாணினி பெயரிட்டழைக்கும் மொழியில், அல்லது அக்காலத்தில் வழக்கில் இருந்த "பிராக்கிருத மொழியில் இருந்திருக்க வேண்டும். ஆனால் நாம் பெற்றிருக்கும் இராமாயணம் கி. மு. பத்தாம் நூற்றாண்டிற்கு முன்னர், நிச்சயமாக வழக்கில் இல்லாத "பாஷா” எனப் பாணினி பெயர் சூட்டி அழைக்கும் இலக்கிய மொழி நடையில் உளது. மந்திரப் புனைவார்களின் வழிமுறை எந்தக் காலத்திற்குப் பிறகு அழிந்து விட்டதோ, பாரதப் போர் நிகழ்ந்த அந்தக்காலத்தில் கிளை மொழியாம் சந்தா மொழியும் மறைந்துவிட்டது. பிராமணாக்களிலும், ஆரண்யாக்களிலும் மேற்கொள்ளப்பட்ட சந்தா மொழிக்கும், பாஷா மொழிக்கும் இடைப்பட்டதான, வேறொரு கிளை மொழி, சந்தா மொழியைத் தொடர்ந்து வந்தது. நாம் பெற்றிருக்கும் இராமாயணத்தை, இராமன் காலத்தவரான வால்மீகி எழுதிய இராமாயணமாக ஏன் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதற்கான மற்றொரு காரணம், அதில், இராமன், உயர்பெரும் கடவுளாம் விஷ்ணுவின் திருவவதாரமாவன் என்ற கருத்து இடம் பெற்றிருப்பதாம். வேத வழிபாட்டு நெறியில் விஷ்ணு ஒப்புயவர்வற்ற கடவுள் அல்லன், அவனுடைய அவதாரங்கள் பற்றிய கொள்கை வேதசமயக் கோட்பாடுகளுக்குப் புறம்பானது. இராமனுடைய பெயர் "ராமர்", ரிக் வேதத்தில் (10 : 92 : 14), வேள்விகளை நிறுவிச், சமய கருமார்களுக்குப் பெரிய பெரிய தகவினைகளைத் தந்த மகவான்களின் பெயர்ப் பட்டியலின் இடம் பெற்றுள்ளது. இங்குத் தெய்வத் தன்மை குறித்த உரிமை எதுவும் ஏற்றப்படுவதின்றி, வெறும் மானிடனாகவே அவன், குறிப்பிடப்பட்டுள்ளான். இராமனுக்குத் தெய்வத்தன்மையை