பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/417

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

本菲酶 - தமிழர் வரலாறு உதியன் இருதிறப் படையினர்க்கும் உணவளித்தான் எனக் கூறுவதன்மூலம், இந்தியாவின் தென்கோடி முனையைச் சேர்ந்த ஒர் அரசன், கோதுமை உணவுண்ணும், துரியோதனன், யுதிஷ்டிரர் படைவீரர்களுக்கு உணவு படைக்க, அரிசியையும், அறுசுவையூட்டும் உணவுப் பொருட்களையும் குருக்ஷேத்திரத்திற்குச் சுமந்து சென்றான் எனக் கூறுவதில் உள்ள பொருத்தமின்மையை உணராமலே, உரையாசிரியர், அம் மூலவரிகளில் குறிப்பாக உணர நின்ற ஒன்றை, வேறு வகையில் விரித்துணர வைத்துள்ளர். (இந்தியாவின் தென்கோடி முனையைச் சேர்ந்த ஒர் அரசன், அரிசி முதலாம் உணவுப் பொருட்களைக், குருக்ஷேத்திரத்திற்குச் சுமந்து சென்றான் என்பது பொருத்தமில்லாக் கூற்று என்ற இந்நூலாசிரியர் கருத்து பற்றி, மொழிபெயர்ப்பு ஆசிரியரின் விளக்கத்தைச் "செங்குட்டுவன் வடநாட்டுப் படையெடுப்பு உண்மை நிகழ்ச்சி அன்று; வெறும் கட்டுக் கதை" என்பது சரிதானா? என்ற தலைப்புள்ள கட்டுரையில் கண்டுகொள்க.) நான் கூறியதுபோல், மக்களுக்கு உணவு படைப்பதன் மூலம், உதியன், கெளரவர்கள் இறந்த நாளைக் கொண்டா 6176TTLG5, அவ்வரிகளில் பொருந்தும் பொருளாம். இக்கொண்டாட்டம், பெரும்பாலும், சிரார்த்தம் என்பதன் இயல்புடிையதாகும். அல்லது ஒருகால், பாரதப்போர் குறித்த நாடக நிகழ்ச்சிகளின் இறுதி நாள் விழா ஆதலும் கூடும். ஏனைய நிகழ்ச்சிகளைப் போலவே, மகாபாரத நிகழ்ச்சிகளில் உள்ள கதாபாத்திரங்களைப்போல ஒப்பனை செய்து கொண்டு, இசையும் பாட்டும் தொடர, நடிகர்கள் ஆடிக்காட்டும் ஊமை நாடகமாம், அந்நாட்டிற்கே உரியதான, கதகளி என அழைக்கப்படும் நாடகத்தால், சேரநாடு, பண்டைக் காலந்தொட்டே புகழ் வாய்ந்தது. அதுபோலும் நிகழக் கூடியதே. ஆண்டாண்டு காலத்திற்கு முன்னரே இறந்துபட்ட வீரர்களுக்கு இவைபோலும் இறுதிச் சடங்காம் பலியுணவு வழங்குதல் தமிழ் நாட்டில் பரவிய வழக்கமாகும். படைக்கும் இவ்வழக்கப் "பட்டவர்குறி" என