பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 தமிழர் வரலாறு இராமன் வாழ்ந்திருந்த காலத்தில் ஏற்றிக் கூறியிருப்பார் வால்மீகி என்பது ஒப்புதற்கு இயலாதது. மேலும் வைணவ ஆகமங்கள் வேதங்களைப் போலவே வைணவர்களுக்கு அதிகாரம் பெற்றனவாம் என்பதை உறுதி செய்ய ஆகமப் பிராமண்யம் என்ற நூலை, யாமுனாச்சாரியார் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் எழுத வேண்டுமளவு தொடக்க காலத்தில் வேதச்சமயக் கொள்கைகளோடு முரண்பட்டதான, ஆகமச் சமய நெறியில் உருப்பெற்றவை, தெய்வத் திருவவதாரக் கருத்துகள். மகாபாரதப் போருக்குப் பின்னர், வேத வேள்வி வழிபாட்டு நெறிகள் குன்றத் தொடங்கிய நிலையில், வட இந்தியாவில் ஆகம வழிபாட்டு நெறிகள் முக்கியத்துவம் அடைந்தன. ஆகவே, விஷ்ணுவின் அவதாரங்களில், இராமாவதாரமும் ஒன்று என்ற கொள்கை, இராமகாதையில், கி.மு. பத்தாம் நூற்றாண்டிற்குப் பின்னரே இடம் பெற்றிருக்க இயலும், ஆகவே, வால்மீகியால் இராமன் வாழ்ந்த காலத்தில் எழுதப்பட்ட இராமகாதை, கி.மு. பத்தாம் நூற்றாண்டிற்குப் பின்னர், "பாஷா" எனப் பாணினி பெயரிட்டழைக்கும் ஒரு மொழியில் திரும்ப எழுதப்பட்டது. வேறு பல புறம்பான நிகழ்ச்சிகள் அல்லாமல் இராமன் ஒரு அவதாரம் என்ற கொள்கையும், அக்கதையுள் அப்பொழுது நுழைந்து விட்டது என நான் முடிவு செய்கிறேன். பெளதாயன தர்மசூத்திரத்தின் கிரந்த எழுத்துகளிலான தென்னிந்தியப் பதிப்பு ஒன்றில் கொடுக்கப்பட்டிருக்கும், கோத்திரம் படைத்தவர்களின் பெயர்ப் பட்டியலில், கோத்திரம் படைத்த்வர்களாக வால்மீகி, பாணினி ஆகியோரின் பெயர்கள் ஒரு சேர இடம் பெற்றுள்ளன. இது யாரோ ஒரு வால்மீகியும், பாணினியும் சம காலத்தவர் என்ற கருத்தைக் கொடுக்கும். கி. மு. ஏழாம் நூற்றாண்டினராகிய இந்த வால்மீகி, "ப்ராசெதஸ்" வால்மீகியின் இராமாயணத்தை இலக்கியச் சமஸ்கிருத நடையில் திருப்பி எழுதி, அதில் இராமன் விட்ணுவின் திருவவதாரம் என்ற கொள்கையுைம் இணைத்திருக்க வேண்டும். இராமாயண மகாபாரதங்களை மிக நுணுக்கமாக ஆராய்ந்த பின்னர், திரு "லாஸன்” அவர்கள் "வீரகாவியங்களில் இராமனும், கிருட்டிணனும்,