பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/426

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேர அரசர்கள் - 419 தம்மைப் புரந்தார் மறைவு குறித்து இரங்கி அழுவார். ஓர் அவையில் கூடியிருந்தாற் போல, அம்மரத்தடியில் அமர்ந்திருந்தனர் என விளக்கம் தருவர் உரையாசிரியர்கள். ஆரியப் புதுக்கடவுள்களுக்கு எதிராகப், பண்டைய தமிழ்க் கடவுள்களும், தங்கள் இடங்களை உறுதியாகத் தக்க வைத்துக்கொண்டு இருந்தன. அதற்கேற்ப, வெற்றிப்போர் முரசின் கடவுள் பாராட்டப் பெற்றுளது . ஆனால், மந்திர வழிபாட்டுடன் கலந்தே பாராட்டப் பெற்றுளது. "முழங்கு மந்திரத்து அருந்திறல் மரபின் கடவுள் பேணியர்" (பதிற்று : 30:33-34). அம்மந்திரங்கள், வடமொழி மூலமந்திரங்களாக அல்லாமல், புதிதாக ஆரிய மயமாக்கப்பட்ட அரசர்களின் பயன்கருதிப், புதிதாக உருவாக்கிய வடமொழி மந்திரப் போலிகளாதல் கூடும். வெற்றித் திருமகள் இன்னமும் வாகை மரத்திலேயே குடிகொண்டுள்ளான். "கடவுள் வாகை." (பதிற்று : 66 : 15). ஆகவே, ஆரியத் தலையீடுகள், சென்ற நூற்றாண்டைக் காட்டிலும், மிகமிக நெருக்கமாம் என்றாலும், அப்பாக்களில் தமிழ் இலக்கிய மரபுகள் தொடர்ந்து இருந்து வரலாயின என்பது தெளிவு. அப்பாக்கள் ஒவ்வொன்றிற்கும், தொல்காப்பிய இலக்கண முறை வகுத்த துறை, திணைகள் அளிக்கப்பட்டு உள்ளன. பாணர்களுக்கும், விறலியர்க்கும், கறிஉணவும் கள்ளுமல்லாமல், பொன்னணிகள், பரி, கரி, தேர் முதலாம் பரிசில் பொருட்களை வழங்குவது போலும் மிகப் பழைய விளக்கச் செய்திகள் பதிற்றுப்பத்தில் நிரம்ப இடம் பெற்றுள்ளன. பதிற்றுப்பத்தின், ஒவ்வொரு பத்தின் அடிப்படைக் குறிக்கோள், சேரப் பெருவீரன் ஒருவன் புகழ்பாடுவதாகும். முதல் பத்து அழிந்துவிட்டது; அது, உதியஞ்சேரல் புகழ்பாடுவதாக இருக்கக் கூடும் எனக் கருதப்படுகிறது. இரண்டாம்பத்து, அவன் மகன் நெடுஞ் சேரல் பற்றியது ; ஏனைய பத்துகள், இச்சேரர் குலத்துத் தூரத்து உறவினர், அல்லது இளைய பிரிவினர் பற்றியன. அச்சேரப் பெருவேந்தர் இருவரின் பெருஞ்செயல் குறித்த ஆய்வு இனி மேற்கொள்ளப்படும்.