பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/429

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

422 . - - தமிழர் வரலாறு நெடுஞ்சேரலாதனும் வேதவேள்விகளும் : பதிற்றுப்பத்தின் இப்பாடல்கள், பெரும்பாலும் பேரரசர்கள், குறுநிலத் தலைவர்களின், பொதுவான புகழுரைகள்ையே கொண்டுள்ளன; என்றாலும், நம் வீரன் குறித்த, மேலும் சில செய்திகளையும், அவற்றிலிருந்து திரட்டக்கூடும். அவ்வகையில், அவன், காடுகளை அழித்து நாடுகண்டான். கோயில்கள் பல கட்டினான், அக்கோயில் களுக்குப் பல்வேறு வழிபாட்டு நன்கொடைகளை வழங்கினான். "காடே கடவுள்மேன" (பதிற்று 13 : 20), "புரைவயின் புரைவயின் பெரிய நல்கி" (பதிற்று : 15 : 37) என்ற தொடர்களைக் காண்க. ஆகவே, இவ்வரசனின் ஆட்சிக் காலத்தில், அரசவையில், பிராமணர்கள் சிறப்பான இடத்தைப் பெற்றிருந்தனர் எனக் கொள்ளலாம். பெரும் பாலும், இதனாலேயே இந்நெடுஞ்சேரலாதனின் தம்பியாம் பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் பாடிய புலவர் கெளதமனார், அவ்வரசன் துணையால் பல வேள்விகளைச் செய்தார்; பத்தாவது வேள்வி செய்திருக்கும் போது, மனைவியோடு சுவர்க்கம்புகுந்தார் என்ற கட்டுக்கதை, பிற்காலத்தில் எழவும் ஆயிற்று. (இவ்வருஞ்செயல் குறித்த, மிகப்பழைய குறிப்பு, வழக்கம் போலவே, கற்பனைக் கதைக் களஞ்சியமாம் சிலப்பதி காரத்தில் இடம் பெற்றுளது. "நான்மறையாளன் செய்யுள் கொண்டு மேனிலைஉலகம் விடுத்தோன்" (சிலம்பு : 28 , 137 - 138) - - நெடுஞ்சேரலாதனின் வெற்றிகள் : பதிற்றுப்பத்து இரண்டாம் பத்தின் முதல் பிாட்டு, "முருக்கமரங்கள் திறைந்த மலையிடத்தே உறங்கும் கவரிமான்கள் பகற்போதில் தாம் மேய்ந்த் நரந்தம் புல்லையும், பரந்து விரிந்த அருவி நீரையும் கனவில் கண்டு மகிழ்வதற்கு இடமான, ஆரியர் நிறைந்து வாழும், பெரும்புகழ் வாய்ந்த இமயம், தென்குமரி ஆகிய இவற்றிற்கு இடைப்பட்ட நாட்டில் உள்ள, செருக்குற்றுத் தம் புகழைஉயர்த்திக்கூறும்