பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/436

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேர அரசர்கள் 429 பாடல்கள், ஆரியர்களோடு நடைபெற்ற மேலும் சில போர்கள் பற்றியும் கூறுகின்றன : அவை பற்றிய ஆய்வினை, ஈண்டு எடுத்துக் கொள்வோம். அவற்றுள் இரண்டு, மருதத் தினை தழுவிய பாடல்களில் உவமைகளாக இடம் பெற்றுள்ளன. அழகுறத்தைத்த தழையாடை உடுத்துத் தனக்கு ஒப்பார் இல்லாதவளாய் விழாக்களமெல்லாம் தன் வரவால் பொலிவு எய்த வந்து நிற்கும் விறலி. கணவனைப் பரத்தையர் உறவு கொண்டு விடாவாறு காத்து நிற்கும் தோழியர் மீது கொண்ட வெற்றிக்குப்புகழ் வாய்ந்த முள்ளுர்ப் போர்க்களத்தில் உறை கழித்த வாளோடு களம் புகுந்த மலையமானது வேற்படை அக்களத்தில், ஒன்றுகூடி நின்று போரிட்ட ஆரியரை வென்று ஒட்டிப் பெற்ற வெற்றியை உவமையாகக் கூறுகிறது அவ்விரண்டில் ஒரு பாட்டு. - "பிணையல் அந்தழைத் தைஇத் துணையிலள், விழவுக்களம் பொலிய வந்து நின்றனளே, எழுமினோ எழுமின் எம் கொழுநன் காக்கம்: ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளுர்ப் பலருடன் கழித்த ஒள்வாள் மலையனது ஒருவேற்கு ஒடியாங்கு, நம் - பன்மையது எவனோ? இவள் நன்மைதலைப் படினே" - நற்றினை : 170. முள்ளுர், மலையமான் திருமுடிக் காரியின் தலை நகராகும். மலையன், மலையமான் என்ற சிறப்புப் பெயர்கள், அவன் சேர அரச இனத்தில் வந்தவன் என்பதைக் காட்டுகின்றன. "சிவந்த வேற்படையினையும், வீரக்கழ வினையும் உடைய முள்ளுர்க்கு அரசனாகிய காரி என்பான், அழியா நற்புகழை நிலைநாட்டிய வல்வில் ஓரி என்பானைக் கொன்று, தெய்வதச்சனால் இயற்றப்பட்ட பலரும் புகழும் பாவை நிற்கும் சிவந்த வேர்ப்பலா மரங்கள் நிறைந்த கொல்லி மலையைச் சேரர்க்குக் கொடுத்தான் என்கிறது பிறதொரு பாட்டு : - . . . .