பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/444

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேர அரசர்கள் 437 "தெவ்வர், சிலைவிசை அடக்கிய மூரி வெண்தோல் அனைய பண்பின் தானை மன்னர் இனி யார் உளரோ? நின்முன்னும் இல்லை : மழைகொளக் குறையாது, புனல்புக நிறையாது விலங்குவளி கடவும் துளங்கிரும் கமஞ்சூல் வயங்குமணி இமைப்பின் வேல் இடுபு முழங்குதிரைப் பனிக்கடல் மறுத்தி சினோரே' - பதிற்று : 45 : 1.5 - 22. புலவர், அடுத்தபாட்டிலும், அப்பொருளுக்கே வந்து, "சங்கு முழங்கும் கடல் கலங்குமாறு, வேற்படையை ஏவி, உடைந்து தலைமடங்கும் அலைகளைக் கொண்ட நீர்ப் பரப்பாகிய ஒலிக்கும் கடலைத் தோற்று ஒடப் பண்ணிய வெல்லும் புகழ் வாய்ந்த குட்டுவ!" என அழைக்கிறார். "கோடுநரல் பெளவம் கலங்க வேலிட்டு உடைதிரைப் பரப்பின் படுகடல் ஒட்டிய வெல்புகழ் குட்டுவன்" - பதிற்று : 46 : 1 - 13. புலவர், அவனை, "அழிக்க இயலாத புகழை நிலைநாட்டி, கடலிடையே புகுந்து, அக்கடலோடு பெரும்போர்புரிந்த குளிர்ந்த கடற்றுறைகளைக் கொண்ட பரதவேன!" என மேலும் ஒருமுறை அழைக்கிறார். "கெடலரும் பல்புகழ் நிலைஇ நீர்புக்குக் கடலொடு உழந்த பனித்துறைப் பரதவ -பதிற்று : 48 : 3-4.

அடுத்து அடுத்துத் திரும்பத்திரும்பக் கூறப்படும் இப்பாராட்டு உணர்த்தும் பொருள் யாது என்பதை யூகித்து அறிதல் கடினம். குட்டுவன் வேல், அவ்வாறு வீசப்பட்டதால் கேன்யூட் (Canute) என்பாரின் உரத்துக்குரல் எழுப்பி இட்ட ஆணை சாதிக்காத எதைச் சாதித்துளது? வேல் எறிதல்,