பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/445

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.38 தமிழர் வரலாறு குட்டுவனின் கடலாதிக்கத்தை உணர்த்தும் சின்னமாகவே, பெரும்பாலும் உள்ளுணர்வோடு நடைபெற்றுளது. பரணர், அகத்துறைப் பாடல் ஒன்றில் அப்பொருள் குறித்து மீண்டும் கூறியுள்ளார். "குட்டுவன், தன்னுடன் போரிடவல்ல பகைவரை, நில எல்லைக்குள் காணாமையால், பொங்கி எழும் சினம் மிகுந்து, போர் புரியும் தன் ஆற்றலால், கடலை வளைந்து ஓங்கி எழும் அலைகளையுடைய கடல் பின்னிட்டு ஒடுமாறு ஒட்டிய, வெற்றி மாண்பு மிக்க வேல்" "குட்டுவன் பொருமுரண் பெறாஅது, விலங்கு சினம் சிறந்து செருக்செய் முன்பொடு முந்நீர் முற்றி ஓங்குதிரைப் பெளவம் நீங்க ஒட்டிய நீர்மாண் எஃகம்" - அகம் : 212 : 16 - 20. கடல்மீது வேல் எறிந்து, அதைப் பின்னடையச் செய்யும் இவ்வீரச்செயல், பிற்காலத்தில், ஒரு பாண்டியன் ஒருவனுக்கும், அதன் காரணத்தால் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் எனும் பெயர் பூண்டானுக்கும் ஏற்றி, உரைக்கப் பட்டுளது. (புறநானூற்று 9ஆம் எண் பாடலையும், அப் பாடலின் 10ஆம் வரிக்கு, இன்றைய பதிப்பாசிரியரின் குறிப்பையும் காண்க) ஈண்டு எடுத்துக் காட்டிய எடுத்துக் காட்டுகள், ஓர் எளிய கடல்விழா, எத்துணைப் பெரிய வெற்றிச் செயலாக உருப்பெற்று விட்டது என்பதைக் காட்டுகின்றன. - நெடுஞ்சேரல் காலத்தில், சேரநாடு ஆரிய ஆதிக்கத்தின் கீழ்க்கொண்டு வரப்பட்டு விடவே நெடுஞ்சேரலாதன், கடல் ஒதுங்கி இடம் அளிக்கக் கடல்மீது வேல் எறிந்த பரசுராமன் கதையால் ஊக்கம் பெற்று, அப்பிராமணப் பெருவீரன் செயலை முன்மாதிரியாகக் கொண்டு விட்டது நடந்திருக்கக் கூடியதே. பிற்காலத்தே, மதுரைத்தலபுராணம் உருவாகவே, இவ்வெற்றிச் செயல், பாண்டியன் ஒருவனுக்கும் ஏற்றி உரைக்கப்பட்டது. மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சிவனிடம் தெய்வத்தன்மை வாய்ந்த வேல் ஒன்றைப் பெற்று,