பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/463

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

456 தமிழர் வரலாறு எவ்விக்கு உரிய நீழல் நாடு, மருதவளத்தையும் நெய்தல் வளத்தையும் ஒருசேரக் கொண்டது. மருத நிலுத்து உழவர். தாம் அறுத்த நெல்லின் தான்களைக் கடா விட்டுத் துற்றுங்கால் எழும் துரும்புகள், அயலே உள்ள நெய்தல் நிலத்து உப்பு வயல்களில் சென்று படியுமாக, அதனால் சினங்கொள்ளும் நெய்தல் நிலத்தவர்க்கும், மருத நிலத்தவர்க்கும் இடையே மூளும் பகையை, அவ்வூர் வாழ் முதுபெரும் மக்கள் தீர்த்து வைத்து, இரு திறத்தவர்க்கும் இனிய மது அளித்து மகிழ்ந்து போகச் செய்வர் என எவ்வியின் நாட்டு நலம் பாடியுள்ளார் குடவாயில் சீரத்தனார். "போர்பு அழித்துக் கள்ளார் களமர் பகடுதளை மாற்றிக், கடுங்காற்று எறியப் போகிய துரும்புடன், காயல் சிறுதடி கண்கெடப் பாய்தலின், இரு நீர்ப்பரப்பின் பனித்துறைப் பரதவர், தீம்பொழி வெள்ளுப்புச் சிதைதலின் கினை இக், கழனி உழவரொடு மாறெதிர்த்து மயங்கி, இருஞ்சேற்றள்ளல் எறி செருக்கண்டு, நரைமூதாளர் கைபினி விடுத்து, நனைமுதிர் தேறல் துளையர்க்கு ஈயும் பொலம் பூண் எவ்வி நீழல்" (அகம் : 366). எவ்வியின் மிழலைநாடு நீர்வளம் மிக்கது . அவன் நாட்டு முத்துர் போலும் பேரூர்கள் நெல்வளம் மிக்கது என்பதறிந்து தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், எவ்வியின் மீது படைபெயடுத்துச் சென்று, அவனையும் கொன்று, அவன் நாட்டையும் கைக்கொண்ட செயலைக் கூறியுள்ளார். அந்நெடுஞ்செழியனை, மதுரைக் காஞ்சி பாடிப் பாராட்டும் மாங்குடிகிழார் : "தாங்கா உறையுள் நல்லூர் கெழீஇய, ஒம்பா ஈகை மாவேள் எவ்வி, புனலம் புதவின் மிழலையொடு, கழனிக் கயல் ஆர் நானா, போர்வில் சேக்கும், பொன்னணி யானைத் தொன் முதிர் வேளிர், குப்பை நெலின் முத்துறுதந்த கொற்ற நீள்குடைக் கொடித் தேர்செழிய!" (புறம் : 24). பெருங்கொடை வள்ளலாம் எவ்வி இறந்து விட்டான். ஆனால், அவன் மறைவினைத் தாங்கிக் கொள்ளமாட்டாப் புலவர்வெள்ளெருச்சிலையார். "எவ்வி, மார்பில் வேல்