பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/465

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

458 தமிழர் வரலாறு நெடுஞ்சேணாட்டில் தலைத்தார்ப்பட்ட கல்லா எழனி பல் லெறிந்து அழுத்திய வன்கண் கதவின் வெண்மணி வாயில்" (அகம் : 211), தலையாலங்கானப் போரில், நெடுஞ்செழியன் பால் தோல்வி கண்ட எழுவரில் ஒருவனாக, நக்கீரரால் கூறப்பட்டுள்ளான். ("போர்வல் யானைப் பொலம்பூண் எழினி’ (அகம் : 36). ஆகவே, எழினியும், அவனுக்குத் தம்பாட்டிடை இடம் நல்கிய மாமூலனாரும், தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் காலத்தவரே ஆவர். 7) கட்டி : தமிழகத்தின் வட எல்லையாம் வேங்கடத் திற்கு அப்பாற்பட்டதான, வேற்று மொழிவழங்கும், வடுகர் என்ற இனத்தவர்க்கு உரிய நாட்டைச் சேர்ந்தவன் ; வேற் படையால் வீறுபெற்றவன் என மாமூலனரால் கூறப்படும் கட்டி ("வடுகர் முனையது, பல்வேல் கட்டி நன்னாட்டு உம்பர் மொழிபெயர் தேஎம்" (குறுந் : 1). உறந்தையில் வாழ்ந்து வந்த வீரனும், வள்ளலுமாகிய தித்தன் என்பானோடு போரிட்டு வெல்ல எண்ணிப், பாணன் எனும் மற்போர் வல்லானோடு தமிழகம் வந்து, உறையூரை அணுகிய காலை, தித்தன்பால் பெரும் பரிசில் பெற்ற மகிழ்ச்சியால், அவன் புகழ்பாடும் பாணர் எழுப்பும் இனிய கினை இசையினைச் செவி மடுத்த அளவே இத்துணைப் பெரும்புகழ் உடையானை வெல்வது இயலாது என உணர்ந்து போரிடும் எண்ணத்தையே கைவிட்டுப் பாணனோடு ஓடிவிட்டான் எனப்பரணரும், ("பாணனொடு மலிதார்த் தித்தன் வெளியன் உறந்தை நாளவைப் பாடின் தெண்கிணைப் பாடு கேட்டஞ்சிப், போரடு தானைக் கட்டிப் பொராஅது ஒடிய ஆர்ப்பு" (அகம் : 226), அவ்வாறு ஓடிய கட்டி, சேரமான் கணைக்கால் இரும்பொறையின் படைத்தலைவர்களுள் ஒருவனாக இடம் பெற்று வாழ்ந்திருந்த காலை, கழுமலம் எனும் இடத்தில் வந்து எதிர்த்த சோழன் செங்கணான் படைத்தலைவன் பழையனால் அழிவுற்ற, நன்னன், ஏற்றை, அத்தி, கங்கன், புன்றுறை என்ற அச்சேரர் படைத்தலைவர்களோடு கொல்லப் பட்டான் எனக் குடவாயில் கீரத்தனாரும், ("நன்னன் ஏற்றை, நறும்பூண்