பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/467

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

460 தமிழர் வரலாறு ஊர்முது கோசர் நவைத்த சிறுமையின் கலத்தும் உண்ணாள் ; வாலிதும் உடாஅள்; சினத்திற் கொண்ட படிவம் மாறாள் ; மறங்கெழு தானைக் குற்றக் குறும்பியன் செருவியல் நன்மான் திதியற்கு உரைத்து அவர் இன்னுயிர் செகுப்பக் கண்டு சினம் மாறிய அன்னி மிஞிலி” - அகம் : 262. தன் காவல் மரமாம் புன்னையை வெட்டி வீழ்த்த வேண்டும் என விரும்பி அது செய்யற்க என நண்பன் எவ்வி தடுக்கவும், அது கேளாதே வந்து தன்னை எதிர்த்த அன்னி என்பானைக் கொன்ற கொற்றமிகு திதியன் ஒருவன் புகழ் பாடியுள்ளார் நக்கீரர். "எவ்வி நயம்புரி நன்மொழி அடக்கவும் அடங்கான் பொன்னினர் நறுமலர்ப் புன்னை வெஃகித் திதியனொடு பொருந அன்னி போல விளிகுவை," - அகம் : 126, குறுக்கைப் பறந்தலைப் போரில், திதியனின் புன்னையை வெட்டிவீழ்த்திய அன்னியின் செயல் கண்டு ஆரவாரப் பேரொலி எழுப்பினர் இரவலர் என்கிறார் வெள்ளி வீதியார் "அன்னி குறுக்கைப் பறந்தலைத் திதியன் தொன்னிலை முழுவதும் துமியப் பண்ணிப் புன்னை குறைத்த ஞான்றை வயிரியர் இன்னிசை ஆர்ப்பு:” - அகம் : 45, குறுக்கைப் பறந்தலைப் போரில், அன்னியால் வெட்டி வீழ்த்தப்பட்ட திதியனின் புன்னை நிலைகண்டு கண்கலங்கியுள்ளார் புலவர் கயமனார். "அன்னி குறுக்கைப் பறந்தலைந் திதியன் தொன்னிலை முழுவதும் துமியப் பண்ணிய நன்னர் மெல்லினர்ப் புன்னை." - அகம் : 146