பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/471

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

464 தமிழர் வரலாறு 12) மத்தி : கட்டியின் வாழ்வோடு விளையாடியவன்; கட்டியைக் பாடிய புலவர்களே இம் மத்தியையும், அக்கட்டியோடு இணைத்தே பாடியுள்ளனர்; ஆகவே, கட்டிக்குக் கூறியது மத்திக்கும் பொருந்தும். 13) மோகூர்ப் பழையன் : கள்ளக்குறிச்சியை அடுத்திருந்த மோகூரில் வாழ்ந்திருந்த குறுநிலத்தலைவன் பழையன், மோகூர் மன்னன் எனவும் அழைக்கப் பெறுவன்; கோசர் படைத்தலைவனாகிய பழையன், பாண்டியர் படைத்தலை வனாகவும் பணிபுரிந்து வந்தான். இதைப் "பழையன் மோகூர் அவையகம் விளங்க நான்மொழிக்கோசர் தோன்றியன்ன" (மதுரைக்காஞ்சி : 508 509) . "மாறன் தலைவனாக, ஏந்தடு வாய்வாள் இளம்பல் கோசர் இயல்நெறி மரபின் நின்வாய் மொழி கேட்ப" (மதுரைகாஞ்சி ; 771 - 776) என, மாங்குடி மருதனார் உரை தெளிவாக்குதல் காண்க. பாண்டியர் படைத்தலைவனாய்ப் பணிபுரித்திருந்த போது, வெள்ளம்போலும் பெரும்படையோடு வந்து, பாண்டியர் தலைநகர் கூடலை வளைத்துக் கொண்ட கிள்ளிவளவனை, அவன் பகைவனாம் கோதை மார்பன்" உவக்கும் வகையில் வெற்றி கொண்டு, அவனுக்குரிய குதிரைப்படை களிற்றுப் படைகளைக் கைப்பற்றிக்கொண்ட பழையன் பேராண்மை யை, நக்கீரர் பாராட்டியுள்ளார். "பழையன் மாறன் மாடமலிமறுகின் கூடல் ஆங்கண் வெள்ளத் தானையொடு வேறுபுலத்து இறுத்த கிள்ளிவளவன் நல்லமர் சாஅய்க் கடும்பரிப் புரவியொடு களிறுபல வவ்வி ஏதில் மன்னர் ஊர்கொளக் கோதை மார்பன் உவகையிற் பெரிதே' அகம் : 346, கிள்ளிவளவனை வெற்றி கொண்ட களிப்பு மிகுதியால் பழையன் மோகூரில் வாழ்ந்திருந்த போது, மாறன் எனப்