பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/474

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேர அரசர்கள் 467 'வலம்படு முரசின் சேரலாதன் முந்நீர் ஒட்டிக் கடம்பு அறுத்து இமயத்து முன்னோர் மருள வணங்கு வில் பொறித்து" - அகம் : 12. பெருஞ்சோற்று உதியன் சேரலாதனோடு, குடநாட்டை வளமிக்க நாடாக்கி ஆண்டு வந்த குட்டுவன் என்ற பிறிதொரு சேரர்குலக் காவலனையும் பாடியுள்ளர். "குட்டுவன் காப்பப், பசிஎன அறியாப் பணைபயில் இருக்கைத் தடமருப்பு எருமை தாமரை முனையின் முடமுதிர் பலவின் கொழுநிழல் வதியும் குடநாடு” - அகம் : 19. இவ்வாறு சேரர் சிலர் வரலாறு உரைத்த அவர், "சோழர் வெண்ணெல் வைப்பின் நன்னாடு" (அகம் : 201) எனச்சோழ நாட்டு நெல் வளத்தையும் கூறியுள்ளார். சோழ நாட்டு வளத்தைப் பொதுவாகப் போற்றிய புலவர், வேலி ஆயிரம் விளையுமளவு சோழநாட்டை வளப்படுத்திய கரிகால் பெருவளத்தானையும், வெண்ணிப் போரில் அவன்பால் தோற்றுப் பெற்ற புறப்புண்ணுக்கு நாணி வடக்கிருந்து உயிர் விட்ட ஆன்றோர்களையும் பாடியுள்ளார். 'கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலைப், பொருதுபுண் நாணிய சேர லாதன் அழிகள மருங்கின் வாள்வடக்கு இருந்தென இன்னா இன்னுரை கேட்ட சான்றோர் அரும்பெறல் உலகத்து அவனொடு செலீஇயர் பெரும் பறிது ஆகியாங்கு" - அகம் : 55. சேரர் குலத்துக் குட்டுவனுக்கு உரிய அகப்பாவை வென்று, அதைப் பகற் போதிலேயே தீயிட்டு அழித்த பெயர் அறியாச் சோழர்குலச் செம்பியன் ஒருவனையும் பாடியுள்ளார்.