பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/478

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேர அரசர்கள் 47? தொல்காப்பியரும் இலக்கணம் வகுத்துள்ளார். "வம்பு நிலையின்மை" (தொல், உரி, 29). சூத்திரம் காண்க, ஆக, "வம்பமோரியர்” என்ற தொடருக்குத் தமிழகத்தின் மீது போர்தொடுத்து வருவதன் விளைவாக, அழிந்து போகப்போகும், நிலையாமையினைத் தழுவப் போகும் மேர்ரியர் என்பதே பொருந்தும் பொருளாகுமே அல்லது, புதிய மோரியர் என்பது பொருந்து பொருளாகாது. ஆக, வம்ப என்ற ஒரு சொல்லுக்குப் பொருந்தாப் பொருள் கொண்டு விட்டு, அச்சிறு ஆதாரத்தைப் பிடித்துக் கொண்டு, தமிழகம் வந்த மோரியரையும், அவர்களைக் குறிப்பிடும் மாமூலனாரையும், சிலநூறு ஆண்டு காலத்திற்குப் பின் நோக்கித் துரத்திவிடுவது பொருந்தாது. தென்னிந்திய வரலாறு எழுதிய வரலாற்றுப் பேராசிரியர்களுள், திருவாளர் எஸ். கிருஷ்ணசாமி அய்யங்கார் அவர்களும் ஒருவர். அவர், தம்முடைய தென் affióu ouyaosrågskär Gigirl #5th [Beginning of South Indian History Page ; 85). என்ற நூலில், "மோரியர் வருகையைக் குறிக்கும் பாடற் பகுதிகள், கி. பி. முதலாம் நூற்றாண்டிற்கு உரியவாம் எனக் கொள்ளுதல் வேண்டும்." என்றும், "மாமூலனார், கரிகால் பெருவளத்தான் சமகாலத்தவர் என்பதற்குப் போதுமான அகச்சான்றுக்ள உள்ளன" என்றும் கூறிக் காரிகாலன் பகைவனும் பெருஞ்சேரலாதன், போரில் பெற்ற புறப்புண்ணுக்கு நாணி, வடக்கிருந்த உயிர் விட்டது கேட்ட சான்றோர்களும் வடக்கிருந்து உயிர்விட்ட செய்தியைக் கூறும் மாமூலனார் பாட்டைத் (அகம் : 55 தம் கூற்றிற்கு ஆதாரமாகவும் கொண்டுள்ளார். இதை எடுத்துக் காட்டியிருக்கும் திருவாளர் பி. டி. எஸ். அவர்கள், சந்திரகுப்தன் அல்லது பிந்துசாரன் காலத்தின் மெளரியரின் தென்னிந்தியப் படையெடுப்பு நிகழ்ந்தது என்ற கூற்று, இந்நான்கு பாக்களையே அடிப்படையாகக் கொண்டுளது, எனக் கூறிவிட்டுத், "திருவாளர் எஸ். கிருஷ்ணசாமி அய்யங்கார், தம் முடிவிற்குப் போதுமான